2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

Prime Group’இன் Waterfall Residencies Malabe சொகுசான வாழ்க்கைக்கு வரவேற்கிறது

Freelancer   / 2024 ஜூன் 04 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே பகுதியின் செழுமையான சூழலில் அமைந்துள்ள Prime Group இன் புதிய செயற்திட்டமான 'Waterfall Residencies,' குடும்பத்தாரை சொகுசான வாழ்க்கைக்கு வரவேற்றுள்ளது.

Prime Group, Waterfall Residencies இல் விருது வென்ற மற்றும் பரந்த விலாக்களை உள்ளடக்கியுள்ளதுடன், இயற்கைக்கு நட்பான, இரம்மியமான வதிவிடத் தொகுதியாக, மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையை அண்மித்து அமைந்துள்ளது.

5 ஏக்கர் காணியில் அமைந்துள்ள Waterfall Residencies இல், இரண்டு அடுக்கு இடவசதிகளைக் கொண்ட வீட்டு அலகுகள் காணப்படுவதுடன், அவை மூன்று படுக்கை அறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளன. இவை வதிவோருக்கு கொழும்பு நகர சௌகரியமான பரந்த ஓய்வான அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. Waterfall Residencies எனும் பெயருக்கமையவே, 100 அடி நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு, கிறிஸ்டல் குளம் போன்றதொரு அமைப்பை வழங்கி, அதன் அடிப்படையில் பெயரூட்டப்பட்டுள்ளது. கட்டடக் கலை மற்றும் நிலைபேறான உள்ளம்சங்களுடன், Waterfall Residencies இனால் சொகுசான வாழ்க்கைக்கு புதிய அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறந்த குடும்ப இல்லமாகவும் அமைந்துள்ளது.

Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “Waterfall Residencies ஐ கையளித்துள்ளதனூடாக, கனவு நனவாகியதை நாம் கொண்டாடுவதுடன், இந்த சிறந்த விலாக்களின் புதிய உரிமையாளர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம். உங்கள் இல்லத்துக்கு அரவணைப்பை வழங்குவது என்பது அதன் கட்டமைப்புக்கு அப்பால் நீடிப்பதாக அமைந்துள்ளது – எமது சூழலை பாதுகாத்து, ஆதரவான சமூகத்தை கட்டியெழுப்புவது என்பதாகும். எமது முயற்சிகள் கைகூடும் வேளையில், தேசத்தின் முன்னேற்றத்தில் பங்களிப்பு வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வாழக்கூடிய, விரும்பத்தக்க சமூகங்களை உருவாக்குவதில் தொடர்ச்சியான மேம்படுத்துவதில் எமது ஈடுபாட்டுக்கான உறுதி மொழியை நாம் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றோம்.” என்றார்.

Waterfall Residences இலுள்ள இல்லங்களுக்கான சாவிகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட குடும்பங்கள் பூரிப்படைந்திருந்தன. அவர்களுக்கு தற்போது இயற்கையை நேசிக்கும் வாழிடம் மற்றும் சிறந்த வாழ்க்கை முறை போன்றவற்றுடன் புதிய நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

Waterfall Residencies இல் இல்லமொன்றின் உரிமையாளரான சட்டத்தரணியான அனுராத குணவர்தன குறிப்பிடுகையில், “28 வருடங்களுக்கு மேலாக ரியல் எஸ்டேட் சந்தையில் பேணி வரும் கீர்த்தி நாமத்துக்காக நான் Prime Lands ஐ தெரிவு செய்திருந்தேன். ஆரம்பத்தில் ஒரு இல்லமாக அமைந்திருக்கும் எனக் கருதிய போதிலும், தற்போது சொர்க்கம் போலுள்ளது.  வாடிக்கையாளர் தன்னிறைவில் Prime காண்பிக்கும் அர்ப்பணிப்பு, இன்றைய கையளிப்பு வைபவம் வரையில் முதல் நாளிலிருந்து அவதானிக்க முடிந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முக்கியத்துவமளித்து நடத்துகின்றனர். இந்தத் திட்டத்துடன், சந்தை முன்னோடித்தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அழகிய, சூழலுக்கு நட்பான கொள்கைக்கு எம்மை அறிமுகம் செய்தமைக்காக Prime Group க்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

Waterfall Residencies இனால் குடும்பத்தார் உயர் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேகத்தன்மையை அனுபவிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. Waterfall Residencies இனால், நகர வாழ்க்கையின் சௌகரியத்தை கையளிக்கும் நவீன அம்சங்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

மற்றுமொரு இல்லத்தின் உரிமையாளரான எம்.ஜே.டபிள்யு. சில்வா குறிப்பிடுகையில், “மாலபே Waterfall Residencies இன் கையளிப்பு வைபவத்தில் பங்கேற்றுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். வாடிக்கையாளர் தன்னிறைவுக்கான தனது அர்ப்பணிப்பை Prime Group வெளிப்படுத்தியுள்ளது.  இலாபகரத்தன்மை, முன்னுரிமையளித்தல் போன்றவற்றுக்கு அப்பால் சென்று, தவிசாளரின் அர்ப்பணிப்பினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் சேவையை பெற்றுக் கொடுக்க முடிகின்றது. Prime Group இன் பிரத்தியேகமான சேவை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அசல் பராமரிப்பு போன்றவற்றினூடாக தொழிற்துறையில் அவர்களை வேறுபடுத்தியுள்ளது. என்னைப் போன்ற வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதில் தூர நோக்குடைய தலைமைத்துவத்தை வழங்கும் தவிசாளருக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .