Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 02 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டுக்கல்வி வசதிகளை வழங்குவதில் இருபது வருட அனுபவமுள்ள குயின்ஸ் இன்டர்நேஷனல் பிஸ்னஸ் கம்பஸ் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு ஐரோப்பாவின் ஆர்மேனியாவின் பிரதான பொது மருத்துவப்பல்கலைக்கழகமான யெரெவன் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்கச் செல்லும் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
2000க்கும் மேற்பட்டவிண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர் இம்முறை யெரெவன் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் தங்களின் மருத்துவக்கனவை நனவாக்கமுடியும்.
க.பொ.த உயர்தர உயிரியல்பிரிவில் இரண்டு சித்திகள் மற்றும் சராசரி சித்தி அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் மேலும் இம்முறை உயர்தரப்பெறுபேறுகள் தாமதமாக வருவதால், ஒக்டோபர் மாதம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஒக்டோபர் மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
30 ஆம் திகதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு தோற்றுவதற்காக QIB Campus வாய்ப்பை வழங்கியுள்ளது.
2023 ஆம் கல்வியாண்டிற்காகபுறப்பட்டுசெல்லும்நாள்நவம்பர்மாதம் 15 ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யெரெவன் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு பட்டப்படிப்பு மற்றும் ஒரு வருட மருத்துவ பயிற்சியை முடித்தமாணவர்கள் ஆர்மீனியாவில் அரசு மருத்துவராகப் பணிபுரிந்து மாதச்சம்பளமாக அமெரிக்கடாலர் 2,500-3,000 க்கும் மேல் பெறலாம். கூடுதலாக, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அல்லது இலங்கையிலும் மருத்துவராக பணிபுரியலாம்
ஹோமாகம கொடகமவில் உள்ள குயின்ஸ் இன்டர் நேஷனல் பிஸ்னஸ் கம்பஸ் QIB Campus இதுவரை, 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களது வெளிநாட்டு பட்டப்படிப்புகள் மற்றும் வேலை கனவுகளை நனவாக்க உதவியுள்ளனர். பலதுறைகளில்; டிப்ளோமா படிப்புகளைப் படிக்கவும், இந்த நாட்டில் அல்லது சிங்கப்பூரில் இளங்கலைப் படிப்புகளின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளைப் படிக்கவும், சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இறுதி ஆண்டை முடிக்கவும் QIB Campus வழிகாட்டுதலின் கீழ் முடியும். மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த இலவச ஆங்கில பாடங்களை நடத்துவதில் QIB Campus நிபுணத்துவம் பெற்றுள்ளது.
16 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago
46 minute ago