Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 14 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி மூலிகை அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ReeBonn Cosmetics Pvt Ltd தனது முன்னணி வர்த்தக நாமமான Reebonn Silicone Hair Conditioner ஐ மெருகேற்றம் செய்து புதிய பொதியில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விற்றமின் E மற்றும் இதர முக்கியமான சேர்மானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தத் தயாரிப்பு சந்தையில் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் பெண்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அதிகளவு விரும்பப்படும் Silicon Hair Conditioner வகையாக Reebonn Silicone Hair Conditioner அமைந்துள்ளது. எந்தவொரு கூந்தலுக்கும் மேம்படுத்தப்பட்ட மென்மையையும் பளபளப்பையும் வழங்குகிறது. மழை சூழல், உப்பு நிறைந்த நீர் மற்றும் ஆபத்தான இரசாயனப் பொருட்கள் ஆகியன காரணமாக கூந்தல் உதிர்வு மற்றும் முறிவு ஏற்படுகின்றது. விற்றமின் E உடனான Reebonn Silicone Hair Conditioner இனால் கூந்தல் உதிர்வு மற்றும் முறிவு தவிர்க்கப்படுகிறது. அத்துடன், கூந்தலை இலகுவாக்குவதால் கூந்தலில் சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
தொழில்புரியும் பெண்கள், அடிக்கடி வைபவங்களில் பங்குபற்றும் பெண்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் தம்மை பெருமளவில் ஈடுபடும் பெண்கள் அதிகளவில் புதிய Reebonn Silicone Hair Conditioner ஐ பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் கூந்தல் அதிகளவு கவர்ச்சியானதாக இருப்பதை உணர்வார்கள்.
2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது. இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில், shampoo, silicon conditioner, rinse off conditioner, black henna, face wash, fairness cream, Herbal creamy Beuty soap, Hair oil மற்றும் hand wash liquids போன்றன அடங்கியுள்ளன. சுநநடீழnn கொஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள் ஜப்பான், இந்தியா, தெற்காசியா மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்படுத்தி செய்யப்படுகின்றன.
46 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago