2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Ricoh Smart Panel தொழில்நுட்பம் அறிமுகம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

Gestetner ஒஃவ் சிலோன் பிஎல்சி, இலங்கையில் இரு நவீன ஸ்மார்ட் செயற்றிறன் வாய்ந்த போட்டோப்பிரதி இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் முன்னணி பல்செயற்றிறன் வாய்ந்த அச்சுப்பிரதி இயந்திரங்களை (MFPs) உற்பத்தி செய்யும் Ricoh இனால், இந்த இரு இயந்திரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2016 பெப்ரவரி மாதம் சர்வதேச ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த Smart Operation Panel (SOP) போட்டோபிரதி இயந்திரங்கள் இலங்கையில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Ricoh இன் புகழ்பெற்ற பல்செயற்றிறன் வாய்ந்த அச்சுப்பிரதி இயந்திரங்களின் (MFPs) புதிய உள்ளடக்கமாக அமைந்துள்ளதுடன், அடக்கமான அளவிலும், உயர் திறன் கொண்ட MP 305+SPF கறுப்பு மற்றும் வெள்ளை ஸ்மார்ட் மாதிரியாகவும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு Ricoh இன் பிரின்டர்களும், இரண்டாம் தலைமுறை, 10.1 அங்குல Smart Operation Panel களையும் கொண்டுள்ளதுடன், Intel Processor களை கொண்டுள்ளதுடன், உற்பத்தித்திறனை அதிகரித்து, உயர் வினைத்திறன் மற்றும் உள்தூண்டுதலுடன் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய தொடுகை அலங்கார கட்டமைப்பையும் கொண்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு, ஹில்டன் கொழும்பு ஹோட்டலில் நடைபெற்றது. இதில் Ricoh ஆசியா பசுபிக் பிரைவட் லிமிட்டட் வணிக செயற்பாடுகள் பிரிவின் பொது முகாமையாளர் யசுஷி டகஹாஷி மற்றும் வணிக செயற்பாடுகள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் அவித் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச சந்தையில் தற்போது காணப்படும் ஒரே மாபெரும் இயந்திரம், Ricohtpd வடிவமைப்பு கட்டமைப்பில் இயங்குவதுடன், அன்ட்ரொயிட் மற்றும் iOS மொபைல் சாதனங்களிலும் இயங்கும் திறன் கொண்டது. இது ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களில் இயங்கும் திறன் கொண்டது.

இதில் இன்டர்நெட் பிரவுசர்கள் மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய சாதனங்களும் அடங்கியுள்ளன. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் இணைப்புத்திறனைக் கொண்டுள்ளது.

Ricoh இன் பரந்த வர்ண ஸ்மார்ட் தெரிவுகளில் MPC2004SP, MPC2504SP, MPC3004SP, MPC3504SP, MPC4504SP, MPC6004SP போன்றன அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்களவு வேகம், தர வெளிப்பாடு மற்றும் அதிகளவு தங்கியிருக்கும் திறன் ஆகியவற்றை வழங்குகின்றன.

Ricoh இன் ஆகுPள என்பதன் வர்ணத் தெரிவுகள் மாபெரும் வியாபார ஸ்தாபனங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், அச்சிடும் வேகத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நிமிடத்துக்கு 20 முதல் 60 பக்கங்கள் வரை அமைந்துள்ளன.

இதேவேளை, கறுப்பு மற்றும் வெள்ளை MP 305+SPF என்பது, அமைதியானது என்பதுடன், சகாயமானதான MFPI கொண்டுள்ளது. உயர் தரம் வாய்ந்த பிரின்ட்கள், ஃபக்ஸ்கள், போட்டோ கொப்பிகள் மற்றும் ஸ்கான்கள் ஆகியவற்றை நிமிடமொன்றுக்கு 30 பக்கங்கள் எனும் அடிப்படையில் வழங்குகின்றது. இந்த அச்சியந்திரம், A4-அளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், A3 அளவு கொப்பிகளையும் தயாரிக்கக்கூடியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X