2025 ஜூலை 30, புதன்கிழமை

SDB வங்கியின் ‘உத்தமி’ கணக்கு மீள் அறிமுகம்

Gavitha   / 2016 நவம்பர் 27 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னம்பிக்கையுடன் உயர முயற்சிசெய்யும் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து வலுச்சேர்க்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்துக்கும், தேசத்தின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கும் வகையிலும் அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும் SDB வங்கியினால் “உத்தமி” கணக்கு, பெண்களுக்குப் பல புதிய உள்ளம்சங்களுடன் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  

இந்தச் சேமிப்புக்கணக்கு பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களின் நிதித்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதுடன், அவசியமான ஆளுமைகளையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பை வழங்குவதுடன், தமது வியாபாரங்களை மேம்படுத்திக்கொள்ள அவசியமான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

பெண் தொழில் முயற்சியாளர்க0ள் மத்தியில், சேமிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், “உத்தமி” கணக்கு 6% வருடாந்த வட்டி வீதத்தை வழங்குகிறது.வெவ்வேறு துறைகளில் தாம் முன்னெடுக்கும் வியாபாரங்களுக்கு கடன் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில், வியாபாரத்தின் தன்மையை பொறுத்து கவர்ச்சிகரமான வட்டி வீதங்களையும் வழங்குகிறது. 

உத்தமி சேமிப்புக்கணக்கு மீளறிமுகம் தொடர்பில் SDB வங்கியின் சேவைகள் அபிவிருத்தி முகாமையாளர், நிலுபமா மதுராவல கருத்துத் தெரிவிக்கையில், “குடும்பத்தின் உயிரோட்டமாக பெண் ஒருவர் கருதப்படுகிறார். குடும்பத்திலும் சமூகத்திலும் மகளாக, நண்பியாக, தாயாக மற்றும் பாட்டியாக வெவ்வேறு நிலைகளை வகிக்கிறார். குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அதில் பிரதான நிலைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அவர் தொழில் புரிந்தாலும், இல்லாவிடினும், குடும்பத்தின் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வது என்பது அதில் தங்கியுள்ளது. குடும்பத்தின் வளர்ச்சிக்கு அவரால் பலவிதங்களில் பங்களிப்புகளை வழங்க முடியும். இதில், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வது, வாழ்க்கையின் இலக்குகளை திட்டமிட்டுச் சேமிப்புகளை முன்னெடுப்பது அவற்றில் அடங்கும். தமது வாழ்க்கையில் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் எதிர்பார்க்கும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பொருத்தமான தெரிவாக SDB வங்கியின் உத்தமி சேமிப்புக் கணக்கு அமைந்துள்ளது” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .