Editorial / 2019 ஜூன் 20 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM)’ சந்தைப்படுத்தல் கல்வியை நாட்டின் சகல பிரதேசங்களிலும் விரிவாக்குவதற்காக பல மாகாணக் கல்வி நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருட காலப்பகுதிகளில் சந்தைப்படுத்தல் துறையில் நாடு பூராகவும் எழுந்துள்ள தேவை மற்றும் தொடர்ச்சியான அபிவிருத்தி என்பன நாட்டிலுள்ள மாணவர்களுக்கு மேலதிகமாக சென்றடைவதற்கும், சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் சந்தைப்படுத்தல் கல்வியை வழங்குவதற்கும் SLIM பல மாகாண கல்வி நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது.
SLIM சந்தைப்படுத்தல் கல்வியை பரவலாக்கும் நோக்கை கொழும்பு வர்த்தகப் பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, பொதுவாக, விசேடமாக உயர்கல்வியில் காணக்கூடிய மொழி ரீதியான தடைகளையும் குறைப்பதற்கு எத்;தனிக்கிறது. இந்தக் கண்ணோட்டத்திலேயே பிரதேசக் கல்வி நிறுவனங்களுடனான கூட்டாண்மை உருவாகியது.
அத்துடன், இந்த நிறுவனம், MIS (சிங்களத்தில் சந்தைப்படுத்தல்) மற்றும் MIT (தமிழில் மொழியில் சந்தைப்படுத்தல்) என்பனவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் பாடநெறிகளை ஆரம்பித்தது.
இவ்வகையில், சந்தைப்படுத்தல் கல்வியைத் தொடர ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு விரிவான அடைவை உறுதி செய்கிறது. தற்போது இந்தப் பாடநெறிகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் தொகை உயர்வாக இருப்பது, SLIM யின் தேசிய நோக்கின் வெற்றிக்கு சான்று பகர்கிறது.
இந்தக் கல்வி விரிவாக்கம் சம்பந்தமாக கருத்துப் பகிர்ந்து கொள்ளும் போது, SLIM நிறுவனத்தின் தலைவர் சுரஞ்ஜித் சுவாரிஸ் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘SLIM தேசம் பூராகவும் உள்ள அனைத்து ஆர்வமுள்ள சந்தைப்படுத்துநர்களுக்கும் சந்தைப்படுத்தல் கல்வியை விரிவாக்கும் நோக்குடன் எப்போதும் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதற்கும் செயற்படுத்துவதற்குமான பாதையை உருவாக்குகிறது. SLIM நிறுவனத்தின் கல்வி மையங்கள் நாடு பூராகவும் பரந்திருப்பதால் அது இந்த நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்த சந்தைப்படுத்தல் சகோதரத்திற்கும் பெரும் பெறுமதி சேர்க்கின்றன.
36 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
42 minute ago