2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

SLT-MOBITEL இனால் கேரகல கிராமத்துக்கு புரோட்பான்ட் வசதி

S.Sekar   / 2022 ஜூன் 04 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கேரகல படைவீரர் கிராமத்தில் மற்றுமொரு வலைக்கோபுரத்தை SLT-MOBITEL அண்மையில் நிறுவியிருந்தது. அதனூடாக இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிவேக இணைய இணைப்புத் தீர்வுகளை வழங்கியிருந்தது. போர் வீரர்கள் அடங்கலாக, கிராமத்தைச் சேர்ந்த ஏனைய குடும்பங்களுக்கு உயர் தரமான அதிவேக 4G LTE இணைப்பை இந்தத் திட்டம் வழங்கும்.

நகர அபிவிருத்தி, கழிவகற்றல் மற்றும் சமூக தூய்மை தொடர்பான இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசத்தை பாதுகாக்கும் வகையில் அளப்பரிய அர்ப்பணிப்பை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்காக, இலங்கை இராணுவத்தினால் நாடு முழுவதிலும் இராணுவ வீரர் கிராமிய வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விசார் தேவைகளை கவனத்தில் கொண்டு அதற்கு ஆதரவளிக்கும் வகையில் இணைய இணைப்புத் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதை துரிதப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயலாற்றும் SLT-MOBITEL, அதிவேக 4G புரோட்பான்ட், குரல் மற்றும் பல தீர்வுகள் அடங்கலான இணைப்புத் தீர்வுகளை வழங்குகின்றது. கிராமிய பகுதிகளில் டிஜிட்டல் புரட்சியை ஊக்குவிக்கும் வகையிலும், தேசத்தில் நிலவும் டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையிலும் தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் தீர்வுகளை வழங்குவதில் SLT-MOBITEL தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் SLT-MOBITEL இனால் சூழல் பேணலில் பங்களிப்பு வழங்கும் நாட்டிலுப்பை மரக் கன்றுகளை நடும் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தினூடாக சூழலை மேம்படுத்தவும், இலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பரம்பலை பேணுவதில் பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .