2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

SLT-MOBITEL இன் வருடாந்த நிதி அறிக்கைக்கு கௌரவிப்பு

S.Sekar   / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் வருடாந்த நிதி அறிக்கை 2020 க்கு, CA ஸ்ரீ லங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 56 ஆவது வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொலைத்தொடர்பாடல் பிரிவில் சிறந்த தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் வருடாந்த நிதி அறிக்கை 2020 பிரசுரிக்கப்பட்டது முதல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சிறந்த ஆளுகை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்றவற்றுடன் நிதி அறிக்கையிடலில் ஒட்டுமொத்த சிறப்பு போன்ற அம்சங்களுக்காக பல விருதுகளை சுவீகரித்திருந்தது.

56 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், கௌரவிக்கப்பட்ட சிறந்த முன்னணி நிறுவனங்கள் வரிசையில் SLT-MOBITEL அடங்கியிருந்தது. ஸ்ரீ லங்கா ரெலிகொம் சார்பாக இந்த விருதை, குழும பிரதம நிதி அதிகாரி சஞ்ஜீவ சமரநாயக்க, முகாமைத்துவ கணக்கீடு மற்றும் செயற்திறன் முகாமைத்துவ பிரதி பொது முகாமையாளர் அசங்க விமலரட்ன, பொது உறவுகள் சிரேஷ்ட நிறைவேற்று உதவி முகாமையாளர் வஜிர ஹப்புஹின்ன ஆகியோர் அடங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .