Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நுண் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு Zoho இன் பரந்த மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் வியாபார முகாமைத்துவ சாதனங்களை பெற்றுக் கொடுப்பதற்காக EGUARDIAN Pvt. Ltd உடன் மூலோபாய மீள்விற்பனை உடன்படிக்கையில் SLT-MOBITEL Enterprise கைச்சாத்திட்டுள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, பிராந்தியத்தில் டிஜிட்டல் மாற்றியமைப்பை மேம்படுத்தும் எனவும் செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையில் SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க மற்றும் EGUARDIAN Pvt. Ltd.இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மபாஸ் பாரிட் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Zoho Financial Suite, Zoho Workplace மற்றும் Zoho Marketing Plus போன்ற Zoho இன் பரந்தளவு cloud-அடிப்படையிலான அப்ளிகேஷன்களுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக உள்நாட்டு வியாபாரங்களுக்கு தமது செயற்பாடுகளை சீராக்கி, வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்பும்.
இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை உள்வாங்கி, இலங்கையின் வியாபாரங்களுக்கு தமது சேவைத் தரத்தை மேம்படுத்தகி் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை SLT-MOBITEL வெளிப்படுத்தியுள்ளது. உள்நாட்டு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தீர்வுகளை இந்தப் பங்காண்மை பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த நுண் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு போட்டிகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகரித்துவரும் டிஜிட்டல் உலகில் நிறுவனங்களுக்கு இயங்குவதற்கு வசதியளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இது அமைந்துள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago