Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 23 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, Samsung உடனான தனது 10 ஆண்டுகள் பங்குடமையை அண்மையில் கொண்டாடியது. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், மொபைல் தொலைபேசிகள், சலவை இயந்திரங்கள், Microwave Oven சாதனங்கள் மற்றும் குளிரூட்டிகள் போன்ற Samsung வீட்டுப் பாவனை சாதனங்களின் பெருமளவான உற்பத்தி வரிசையை வழங்கி வருவதால் கடந்தகாலங்களில் பெரும் புகழை சிங்கர் சம்பாதித்துள்ளது.
அந்த வரிசையில், மற்றுமொரு அறிமுகமாக inverter குளிர்சாதனப்பெட்டிகளில் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட, smart convertible என்ற ஒட்டுமொத்த புதிய தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பை உள்நாட்டு வாடிக்கையாளர்கள் தற்போது கொண்டுள்ளனர்.
புரட்சிகரமான ‘Smart Convertible 5-in-1’ உற்பத்தி வடிவமானது பாவனையாளர்களின் பல்வேறுபட்ட வைத்துப் பேணல் தேவைகளை ஈடு செய்கின்றது. பாவனையாளர்கள் தமது தேவைகளைப் பொறுத்து குளிரூட்டி, வைத்துப் பேணுவதை நெகிழ்வுப் போக்குடன் முன்னெடுக்க அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் Twin Cooling Plus தொழில்நுட்பத்தின் வலுவூட்டலை இந்த குளிர்சாதனப்பெட்டி கொண்டுள்ளது.
இதன் உண்மையான சுயாதீன குளிரூட்டல் முறைமையானது தேவைப்படும் சமயங்களில் freezer இனை குளிர்சாதனப்பெட்டியாக (Fridge) மாற்றுவதற்கு இடமளிக்கின்றது. இப்புதிய அறிமுகமானது, மின்வலு வினைதிறன் கொண்டதுடன், நீடித்த உழைப்புடனும், ஒட்டுமொத்த சௌகரியத்துடனும் பாவனையாளர்களின் தனித்துவமான வைத்துப் பேணும் தேவைகளை ஈடு செய்கின்றது.
புத்தம்புதிய தன்மை கெட்டுப்போகாமல் இருத்தல், மின்வலு வினைதிறன், சம அளவான குளிரூட்டல் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றின் இணைப்புடன் Smart Digital Inverter உற்பத்தி வரிசையின் அறிமுகத்தினூடாகவும் கிடைக்கப்பெறுகின்றது.
மின்சாரக் கட்டணப் பட்டியல்களைச் சேமிக்க உதவி, மின் துண்டிப்பு ஏற்படும் சமயங்களிலும் தங்குதடையின்றிய குளிரூட்டல் மற்றும் புத்தம் புதிய தன்மை கெட்டுப்போகாது பேணுவதற்கு நேர்த்தியான ஒரு தீர்வாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago