Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு வழங்கும் பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், செலான் வங்கி தனது ‘Seylan SME Hub’ எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு சௌகரியமானதும் துரிதமான நிதிச்சேவைகளை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களுக்கு விசேட ஆலோசனை உதவிகளை வழங்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.
இலங்கையில் காணப்படும் மொத்த வியாபாரங்களில் சுமார் 75 சதவீதமானவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளராகக் காணப்படுகின்றனர். இவர்களினூடாக மொத்த தேசிய உற்பத்தியில் 52சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பு வழங்கப்படுகிறது.
உலகமயமாக்கலுக்கமைய, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். Seylan SME Hub அறிமுகத்தினூடாக, இலங்கையின் சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர் துறைக்கு நவீன நிதிசார், தொழில்நுட்ப அறிவை வழங்கி, அவர்களுக்கு வலுச்சேர்க்கும் முக்கியமான மற்றுமொரு நடவடிக்கையை செலான் வங்கி உறுதி செய்துள்ளது.
இந்த அறிமுகம் தொடர்பில், செலான் வங்கியின் கிளை கடன் பிரிவின் பொது முகாமையாளர் கே.டி. டபிள்யு ரோஹண கருத்துத் தெரிவிக்கையில், “எமது தேசத்தின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர் பிரிவு முக்கிய பங்களிப்பை வகிக்கிறது.
அவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுக்குப் புத்தாக்கமான நிதிசார் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமின்றி, நிதி முகாமைத்துவம் மற்றும் தொழில்-வாழ்க்கை சமநிலை பற்றி விளக்கங்களை வழங்கி, சிக்கல்களின்றி, அவர்கள் முன்நோக்கிப் பயணிப்பதற்கு வழிகாட்டுகிறோம்” என்றார்.
Seylan SME Hub ஐ செலான் வங்கியின் நாடு முழுவதிலும் காணப்படும் 168 கிளை வலையமைப்பினூடாக அணுகக்கூடியதாக இருக்கும். இதனூடாகச் சிறிய, நடுத்தரத் தொழில்முயற்சியாளர்களுக்கு அர்ப்பணிப்பான வங்கியியல் சேவைகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.
செலான் வங்கியின் உயர் பயிற்சிகளைப் பெற்ற நிதிசார் ஆலோசனை அணியால் சிறிய, நடுத்தரத் தொழில்முயற்சியாளர்களுக்கு அவசியமான உதவிகளை பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களின் வியாபார இலக்குகளை எய்துவதற்கு, நிதி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் வங்கியியல் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளது.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025