2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

Star Garments குழுமம் இலங்கையில் தனது பிரசன்னத்தை விஸ்தரிப்பு

Freelancer   / 2024 ஜூன் 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

Star Garments குழுமம் (“Star”) தனது புதிய விரிவாக்க செயற்பாடான, கொலன்ன மெனுபக்ஷ்ரிங் லிமிடெட்டின் சொத்துகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தது. குழுமத்தின் பன்னிரண்டாவது தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 1000 க்கும் அதிகமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும். உலகின் இதர பாகங்களுக்கு, இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளுக்கு காணப்படும் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு காணப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி, செயலாற்றுவதற்கான Star’இன் நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த கையகப்படுத்தல் தொடர்பில் Komar இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சார்ளி குமார் கருத்துத் தெரிவிக்கையில், “ஆடைகள் உற்பத்தியில் முழுமையான வளங்களையும் வெளிப்படுத்தாத நாடாக இலங்கை அமைந்துள்ளது எனும் எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும், இலங்கைக்கான எமது நீண்ட கால அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக இந்த முதலீடு அமைந்துள்ளது. Komar ஐப் பொறுத்தமட்டில் Star தொடர்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இந்தப் பிரிவின் வளர்ச்சியை தொடர்ந்தும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.

நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்துடன், இலங்கையின் ஆடைகள் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் Star முக்கிய பங்காற்றியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆடைகள் கொள்முதல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் தற்போது 9000 க்கும் அதிகமான ஊழியர்களை தனது சகல தொழிற்சாலைகளிலும் கொண்டுள்ளதுடன், நாட்டில் காணப்படும் மிகவும் புத்தாக்கமான மற்றும் நிலைபேறான நிறுவனம் எனும் கீர்த்தி நாமத்தையும் கொண்டுள்ளது.

AIA New York’s annual Design Awards 2020 இல், நிறுவனத்தின் 70,000 sq. ft புத்தாக்க நிலையத்துக்கு நிலைபேறாண்மை மெரிட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தென்கிழக்காசிய பிராந்தியத்தில் காணப்பட்ட முதலாவது Passive House design ஆக இது அமைந்துள்ளது. சகல தொழிற்சாலைகளிலும் CarbonNeutral® சான்றளிப்புடன், Star இலங்கையில் காணப்படும் மாபெரும் காபன்-நடுநிலை நிறுவனம் எனும் பெருமையை கொண்டிருப்பதுடன், சகல உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் சர்வதேச காபன்-நடுநிலை எனும் சான்றிதழைப் பெற்ற ஒரே நிறுவனமுமாகவும் அமைந்துள்ளது.

Star Garments குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சுகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில்,  “இலங்கைக்கு வெளியில் வளர்ச்சி மற்றும் விரிவாக்க செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளை நாம் இனங்காணும் நிலையில், இலங்கையினுள் காணப்படும் ஆடைத் தொழிற்துறையின் எதிர்காலம் மற்றும் அதன் வாய்ப்புகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளோம். கொலன்ன மெனுபக்ஷ்ரிங் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளமை இந்த நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. நாடு எதிர்நோக்கியிருந்த பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் ஆடைத் தொழிற்துறையில் காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளோம்.” என்றார்.

இந்த முதலீடானது இலங்கையில் தனது உற்பத்தி இருப்பை உறுதி செய்வதற்கான Star’இன் மூலோபாயத்தில் முக்கிய அரணாக இந்த முதலீடு அமைந்திருப்பதுடன், இந்த மூலோபாய கையகப்படுத்தல் நிறுவனத்தின் இருப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .