2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

Sun Siyam பாசிகுடாவினால் CarePhant திட்டம் அறிமுகம்

Freelancer   / 2024 ஜூன் 10 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

Sun Siyam ரிசோர்ட்ஸ் குழுமத்தின் அங்கமான Sun Siyam பாசிகுடாவினால், CarePhant திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனூடாக உடவளவை Elephant Transit Home (ETH)இல் காணப்படும் களு என பெயரிடப்பட்டுள்ள குட்டி யானையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Sun Siyam பாசிகுடாவினால் ஆதரவளிக்கப்படும் CarePhant திட்டம், உயிரியல் பரம்பல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு வாய்ந்த சுற்றுலா செயன்முறைகளை ஊக்குவிக்கும், இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது. Elephant Transit Home (ETH) உடன் கைகோர்த்துள்ளதனூடாக, Sun Siyam பாசிகுடாவினால் களு யானைக் குட்டிக்கு அவசியமான பராமரிப்பு வழங்கப்படுகின்றது. அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ காட்டுப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து, காப்பாற்றப்பட்ட இந்த யானைக் குட்டிக்கு தற்போது Elephant Transit Home (ETH) இல் அரவணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 8 மாதங்கள் வயதான இந்த யானைக் குட்டி, 2024 மார்ச் 23 ஆம் திகதி Elephant Transit Home (ETH) க்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இங்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் விலங்கு பேண் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நிபுணத்துவமான பராமரிப்பு வழங்கப்படுகின்றது.

2024 மே 8 ஆம் திகதி களு யானைக்குட்டிக்கான பராமரிப்பை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை Sun Siyam பாசிகுடா மேற்கொண்டிருந்தது. வனாந்தரத்தில் மீண்டும் களு விடுவிக்கப்படும் வரையில் அவசியமான ஆதரவை வழங்கும். இதற்கமைய மாதாந்தம் சுமார் ரூ. 65,000 பங்களிப்பை (அண்ணளவாக 200 அமெரிக்க டொலர்கள்) வழங்க முன்வந்துள்ளது. Sun Siyam ரிசோர்ட்ஸ் குழுமவாரியாக முன்னெடுக்கப்படும் Sun Siyam பராமரிப்பு நிதியத்தினூடாக இந்த நிதித் தொகை பங்களிப்பு செய்யப்படும். CarePhant திட்டத்தின் அங்கமாக, Sun Siyam பாசிகுடாவினால் Elephant Transit Home இல் காட்சிப் பதாதை நிறுவப்பட்டு, அதில் களுவின் வாழ்க்கைப் பயணம் காண்பிக்கப்பட்டுள்ளதுடன், வனஜீவராசிகள் பாதுகாப்புக்கான ரிசோர்ட்டின் அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிப் பதாதையினூடாக, விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு களு தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் பெறுமதி வாய்ந்த வனஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷெத் ரிபாய் கருத்துத் தெரிவிக்கையில், “CarePhant திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், களுவின் நலனில் முக்கிய அங்கம் பெற்றுள்ளோம். வனஜீவராசிகள் பாதுகாப்புக்கான எமது அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் உறுதி செய்துள்ளதுடன், இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.” என்றார்.

Sun Siyam ரிசோர்ட்ஸ் நிலைபேறாண்மை செயற்திட்ட முகாமையாளர் உபுல் குமார குறிப்பிடுகையில், “எமது நிலைபேறான அபிவிருத்தி இலக் 15 – புவியில் உயிரினம் என்பதுடன் தொடர்புபட்டதாக CarePhant திட்டம் அமைந்துள்ளது. இதனூடாக, Sun Siyam பாசிகுடாவின் உயிரியல் பரம்பலை பாதுகாப்பது மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றுக்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, எமது விருந்தினர்களுக்கும் பரந்தளவு சமூகத்தாருக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எம்மில் ஒவ்வொருவரினாலும் ஆற்றக்கூடிய பங்களிப்பு ஆகியன தொடர்பில் விழிப்புணர்வூட்ட எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

CarePhant திட்டத்தில் Sun Siyam பாசிகுடாவின் பங்கேற்பு என்பது, Sun Siyam Cares நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பரந்தளவு நிலைபேறான முயற்சிகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைப்பது, சமூக அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது மற்றும் மாலைதீவுகள் மற்றும் இலங்கையில் காணப்படும் Sun Siyam ரிசோர்ட்ஸ் இனுள் உள்நாட்டு பாரம்பரியத்தை பேணுவது போன்றவற்றில் இந்த நிகழ்ச்சித் திட்டம் கவனம் செலுத்துகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .