2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

TATA வாகனங்களுக்கு விசேட லீசிங் வசதி

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியும் டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் வரையறுக்கப்பட்ட (DIMO) நிறுவனமும் இணைந்து TATA ரக பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கானப் புதிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

2016 ஒக்டோபர் வரை இந்த புதிய ஊக்குவிப்பு காலம் அமுலில் இருக்கும். தெரிவு செய்யப்பட்டTATA ரக வாகனங்களுக்கு விசேட கழிவுகள், இலவச பதிவுகள், இலவச காப்புறுதிகள் என பல சலுகைகள் இந்த ஊக்குவிப்பு காலத்தில் வழங்கப்படும். கொமர்ஷல் வங்கி விசேட வட்டியின் கீழ் போட்டித்தன்மை மிக்க வாடகைகளை வழங்கும். மேலும் அதன் விரிவான கிளை வலையமைப்பின் ஊடாக துரிதமான லீசிங் சேவைகளையும் வங்கி வழங்கும்.

Tata GenX Nano car, DIMO Batta ரக வாகனங்கள், Tata SuperACE, Tata Xenon Pick-ups பஸ்வண்டிகள், ட்ரக்குகள், கொள்கலன் வாகனங்கள் என்பனவற்றுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் லீசிங் வழங்கப்படும். இவற்றுக்கான விலை 750,000 ரூபாயில் தொடங்கும்.

'தரமான வர்த்தக ரக வாகனங்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளும் தேவையுள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் கடந்த காலங்களிலும் DIMO வும் கொமர்ஷல் வங்கியும் கைகோர்த்து செயற்பட்டுள்ளன. மீண்டும் ஒரு தடவை DIMO வுடன் இணைந்து கவர்ச்சி மிக்க இந்தச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்' என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் கூறினார். 'குறிப்பிட்ட வாடிக்கையாளர பிரிவுக்கு இந்த ஊக்குவிப்புத் திட்டம் பாரிய நன்மைகளை வழங்கும்' என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X