2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

THEFACESHOP முன்னெடுத்திருந்த GET GLAMOROUS

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ்பெற்ற அழகுக்கலை நிபுணர் ரம்சி ரஹ்மானுடன் இணைந்து அழகிய சருமத்தை மேலும் அழகுபடுத்திடும் சிறப்பு ஒப்பனை பயிற்சி பட்டறையை THEFACESHOP முன்னெடுத்திருந்தது. ரம்சி ரஹ்மான் இலங்கை அழகுக்கலை துறையில் அனைவரும் அறிந்த முன்னணி அழகுக்கலை வல்லுநர் ஆவார். அதேபோல், இலங்கையில் சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் சம்மேளனத்தில் (SLAHAB) ஆரம்பகால உறுப்பினராகவும் திகழ்கிறார். 

அன்றாட வாழ்வில் உங்கள் இயற்கையான சருமத்தை அழகாகவும், கவர்ச்சியாகவும் எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளை மற்றும் வழிகாட்டல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பனை பட்டறையின் பிரதான நோக்கமாகும். 

இந்த ஒப்பனை பட்டறையை ஆரம்பித்து THEFACESHOP Chia Seed கிலேன்சிங் போர்ம் Chia Seed சூதின் மிஸ்ட் டோனர் மற்றும் Mango Seed சில்க் மோஸ்ச்சர் லோஸன் ஆகியவற்றை உபயோகித்து சரும ஒப்பனைக்கு ஏற்றவகையில் சருமத்தை தயார்செய்திட வேண்டிய முறைமை தொடர்பாக ரம்சி தெளிவுபடுத்தினார். அதன் பின்னர் எந்தவொரு விசேட நிகழ்வுக்கும் ஏற்றவகையில் THEFACESHOP அழகுசாதனப் பொருட்களை மிகவும் இலகுவாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது. 

உங்களுக்கு உங்கள் நகங்களை வீட்டிலேயே அழகுபடுத்திக் கொள்வதற்கு THEFACESHOP Gel Touch நக பொளிஷ் செய்திடும் உற்பத்திகளை ரம்சி அவர்கள் அறிமுகப்படுத்தினார். இந்த நகபொளிஷ் ஒருமுறை விண்ணப்பிப்பதன் மூலம், உங்கள் நகங்களை அழகாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு உருதுணையாக இருக்கும். Gel Touch நகபொளிஷ் மிகவும் மென்மையாக விண்ணப்பிக்க முடியும். அதேபோல, நகங்களை உறுதியாகவும், நீண்ட நாட்களுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் பராமரிக்கும். 

THEFACESHOP அழகுசாதன உற்பத்திகளைப் பயன்படுத்தி அன்றாட வாழ்வில் அழகை மெருகூட்டிடும் முறையை அறிந்திட ஆர்வம் காட்டும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த ஒப்பனை பட்டறையில் கலந்துகொண்டனர். இந்த ஒப்பனைப் பட்டறையின் முடிவில் பங்குகொண்டவர்களின் கேள்விகளுக்கும், அவர்களின் சந்தேகங்களுக்கும். ரம்சி ரஹ்மான் அவர்கள் தீர்வுகளை வழங்கினார். இந்த ஒப்பனை பட்டறையில் பங்குகொண்ட அதிகமானோர் சமூக வலையத்தளங்கள் ஊடாகவே இந்தப் பட்டறை தொடர்பாக அறிந்துகொண்டாதாக தெரிவித்தனர். மேலும் அவர்களின் சருமத்துக்கு மிகவும் பொருத்தமான ஒரு தயாரிப்பை தெரிவுசெய்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதன்மூலம் கிடைத்தாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். 

இந்த ஒப்பனை பட்டறையில் கலந்துகொண்ட அனைவருக்கும் Makeup பேக் ஒன்றுடன் அன்றைய தினம் கொள்வனவு செய்யும் சகல THEFACESHOP அழகுசாதனப் பொருட்களுக்கும் 20% வரையான தள்ளுபடிகள் வழங்கப்பட்டன.தென்கொரியாவில் ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச ரீதியாக புகழ்ப்பெற்ற THEFACESHOP அழகுசானப் பொருட்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், உள்ளிட்ட 30 க்கும் அதிகமான நாடுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X