Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 14 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
The Body Shop தெரிவுகளில் புதிய அறிமுகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் கோடை கால வெப்பத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தத் தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் அமைந்துள்ள அதன் விற்பனையகத்தில் Fresh Nude Cushion foundation, Down To Earth eye quad palette மற்றும் மூன்று limited edition makeup looks ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. கொழும்பில் காணப்படும் வெப்பநிலைக்கு ஈடுகொடுக்கும் வகையிலான சேர்மானங்களை இந்தப் புதிய தயாரிப்புகள் கொண்டுள்ளன.
The Fresh Nude Cushion Foundation என்பது பயன்படுத்த இலகுவானது, நீடித்து நிலைத்திருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தயாரிப்பு, பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, சருமத்தின் வெப்பநிலையைக் குறைத்துக்கொள்ள மீள பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சிறந்த திரவ foundation ஐ கொண்டுள்ளதுடன், 24 மணி நேர ஈரப்பதனை வழங்கும் வகையில், இந்த சேர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலாரிடையேயும் பயன்படுத்த முடியும். micro-mesh உடனான cushion sponge இனால் சரியான அளவு foundation பெறப்பட்டு விரயமாகாத, தூய்மையான மற்றும் மிருதுவான பாவனைக்கு பயன்படுத்தப்படும். இந்தச் சேர்மானத்தில் கற்றாளை மற்றும் பன்னீர் போன்றவற்றைக் கொண்டுள்ளதால், நூறு சதவீதம் தாவர தயாரிப்பாகும். பசுமையான தோற்றத்துடன், தெளிவான சருமத்துக்கு semi-matte texture ஐ கொண்டுள்ளது.
தாவர நலனைப் பெற்றுக்கொள்ள Down to Earth Eyeshadow Quads and Eye Palette பயன்படுத்தலாம். இயற்கை வர்ணங்கள் கொண்டுள்ளதுடன், பபாசு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சிறந்த சமூகத்தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்கும். நூறு சதவீத தாவர தயாரிப்பு என்பதுடன், எவ்விதமான பெற்றோலிய மற்றும் தாதுப்பொருட்கள் சேர்க்கப்படாததால், உணர்வுகூர்மையான கண்களுக்கு சிறந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .