Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவர்களுக்கு ZERO-DOWN வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்குவதற்கான கூட்டாண்மை John Keells Properties (JKP) நிறுவனத்திற்கும் யூனியன் வங்கிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமைக்கான அணுகலை இலகுவாக்குவதில் இரண்டு தொழில்துறை முன்னணியாளர்கள் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இருந்து இந்த நிதித் தீர்வு உருவாகியிருப்பதுடன், இது VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் கொள்வனவு செய்ய விரும்புவர்கள் முன்பணம் செலுத்தும் சுமையின்றிக் கொள்வனவு செய்ய வசதியை ஏற்படுத்துகின்றது. ZERO-DOWN மூலம், யூனியன் வங்கி திட்ட நிதியில் 75% ஐ முற்பணமாக வழங்கும் என்பதுடன், பின்னர் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கியால் வழங்கப்பட்ட தொகைக்கு திட்ட காலத்தில் மாதாந்தம் சமமான தவணைகளை மட்டுமே செலுத்த வேண்டும்.
John Keells Properties நிறுவனம் மற்றும் யூனியன் வங்கியினால் இணைந்து வழங்கப்படும் ZERO-DOWN ஆனது வெறுமனே நிதித் தயாரிப்பு மாத்திரமன்றி, எப்போதும் இல்லாத அளவுக்கு VIMAN ஜா-எல திட்டத்தை அடையக்கூடியளவுக்கு ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்கும் நோக்கத்துடன், அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் உறுதிமொழியாகும். இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நெகிழ்வுப்போக்கு மிக்க, மலிவான நிதியளிப்புக்கான தெரிவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், வீட்டுஉரிமையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இந்த தனித்துவமான தீர்வு காலத்தின் தேவைக்கு ஏற்ற ஒன்றாகும். ZERO-DOWN திட்டத்திட்டமானது VIMAN ஜா-எல குடியிருப்புத்திட்டத்தில் சாத்தியமான வாய்ப்புகளை எந்தவித முன்கூட்டிய செலவுகளும் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. இது குடியிருப்பைக் கொள்வனவு செய்பவர்களைத் தடுக்கும் ஆரம்ப நிதித் தடைகளைத் தகர்ப்பதுடன், கொள்வனவு செய்பவர்கள் தங்கள் நிதித் திட்டத்தை தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் அணுகவும் இது உதவுகின்றது.
ZERO-DOWN திட்டமானது இலங்கையில் வீட்டின் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான தொலைநோக்கு அணுகுமுறையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “குடியிருப்புங்களை வாங்குவதில் உறுதியாக இருக்கும் பலருக்கு முன்பணத்திற்கான செலவு அதைரியப்படுத்துவதாக அமைகின்றது. எனினும், ZERO-DOWN திட்டத்தின் ஊடாக VIMAN ஜா-எல திட்டத்தில் தொடர்மாடிக் குடியிருப்பொன்றை வாங்க விரும்புவர்களுக்கு நெகிழ்வான நிதித் தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். எமது அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக மாத்திரமன்றி வீட்டின் உரிமையை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் புதிய உலகத்தை உருவாக்குவது என்ற கோட்பாட்டில் John Keells Properties நிறுவனம் அர்ப்பணிப்புடன் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது” என்றார்.
உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ZERO-DOWN திட்டத்தை நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்துவதில் யூனியன் வங்கி பெருமை அடைகிறது” என யூனியன் வங்கியின் சாயா ஜயவர்தன, சிரேஷ்ட உப தலைவர் – நுகர்வோர் வங்கியயில் தெரிவித்தார். “இந்த முயற்சியானது முன்பயணத்தைச் செலுத்துவது என்ற நிதி நெருக்கடி இன்றி நிதி நெருக்கடியின்றி நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் VIMAN ஜா-எல திட்டத்தில் வீடொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
40 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
1 hours ago