Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடவர் ஆடைகளுக்காக இலங்கையினுள் பெறும் வரவேற்பை பெற்றுள்ள நாமமான Vantage அறிமுகப்படுத்தும் ஆடவர்களுக்கான புதிய உள்ளாடை (Innerwear) மாதிரிகளை அறிமுகப்படுத்தும் விழா கடந்த 9ஆம் திகதி, கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலின் Lotus Ballroom அறையில் நடைபெற்றதோடு, ஃபேஷன் துறையில் அதிக நாட்டம் கொண்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்ததைக் காணக்கூடியதாயிருந்து.
Vantage, இலங்கையின் புகழ்பெற்ற ஆடை வழங்குனரான Ebony Holdings நிறுவனத்தினால் உயர் தரத்துடன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் ஆடவர் ஆடை நாமமாகும்.
ஆடவர்களுக்காகவே உயர்தரத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல வகையான உள்ளாடைகள், Vantage உள்ளாடை மாதிரிகள் ஊடாக அறிமுகப்படு த்தப்பட்டுள்ளதோடு, கவர்ச்சியான பல ஃபேஷனுக்கமைவான Trunks உற்பத்திகளும் இதில் உள்ளடங்கியுள்ளன. இவ்வனைத்து உற்பத்திகளும் Vantage stripes மாதிரிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, 95 சதவீதப் பருத்தி, 5 சதவீத spandex கலவையால் தயாரிக்கப்பட்டுள்ளமை இதன் விசேடம்சமாகும். இவ் Vantage உற்பத்திகள் கால்களுக்கு வசதியாக, உடலிற்கோர் சௌகரியத்ைத வழங்கிடும் வகையில் வடிவமை க்கப்பட்டுள்ளதோடு, கவர்ச்சியான பல waistbands, பல வர்ணங்களிலும் Vantage உள்ளாடைகளை நீங்கள் பெற்றிட முடியும்.
இந்நிகழ்வின் போது Ebony Holdings நிறுவனத்தின் தலைவர் ரஷ்மி ரஹீம் கருத்து தெரிவிக்கையில், “உயர் வகையிலான ஆடைகளை விரும்பிடும் மற்றும் புதிய ஃபேஷன் பற்றியதோர் ஆர்வமுடைய வாடிக்கையார்களிடையே, தனித்துவமான விற்பனை நாமம் எனும் நோக்கினை கொண்டுள்ள நாம், அறிமுகப்படுத்தும் இவ் உள்ளாடை மாதிரிகளுடன் எமது பல்வகை உற்பத்தி வரிசைகளிடையே முழுமை பெற்றுள்ளோம். என்றுமே வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்கிடும் நோக்குடன் நாம் உயர் தரத்திலான உற்பத்திகள், புதிய எண்ணங்கள் மற்றும் புதிய உற்பத்திகளுக்கான ஆராய்தலுடனேயே உள்ளோம்” என்றார்.
4 minute ago
6 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
17 minute ago