2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Volvo cars ஸ்ரீ லங்கா சேவை நிலையம் அங்குரார்ப்பணம்

Gavitha   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

IWS ஹோல்டிங்ஸ் குழுமத்தின் புதிய அங்கத்துவ நிறுவனமான Volvo Cars ஸ்ரீ லங்கா, தனது சகல வசதிகளையும் படைத்தகக் காட்சியறையை பேலியகொட பகுதியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 20,000 சதுர அடி பரப்பிலமைந்துள்ள இந்த 3S நிலையம், விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும். இது ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த காட்சியறைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் எனவும் கருதப்படுகிறது. 250 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்நிலையம், சர்வதேச தரங்களுக்கு நிகரான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். 

Volvoஇன் புதிய உத்தியோகபூர்வ இறக்குமதியாளரும், விற்பனையாளருமான Volvo Cars ஸ்ரீ லங்கா பல புதிய மாதிரிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில், XC90, V40, S60, XC60 மற்றும் புத்தம் புதிய S90 ஆகியன அடங்கியுள்ளன. இவை அனைத்தும் அங்குரார்ப்பணத்தின் போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.  

Volvoஇன் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் உருவாக்கப்பட்டுள்ள S90 என்பது, அளவிடக்கூடிய தயாரிப்புக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், வாகனங்கள் பாதுகாப்புத் துறையில் Volvoஇன் தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. S90 என்பது சர்வதேச கௌரவிப்பைப் பெற்றுள்ளதுடன், ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் ஆண்டின் சிறந்த அலங்காரம் என்பதற்கான விருதையும் தனதாக்கியிருந்தது. 

சுவீடனின் வர்த்தக நாமமான Volvo cars பிரதான உள்ளம்சங்களான பாதுகாப்பு,தோற்றம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இலங்கையில் அமைந்துள்ள Volvo cars காட்சியறை உயர் தர நியமங்களைப் பேணக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தக் காட்சியறையின் மூலமாக, பரிபூரண உதிரிப்பாகங்கள் தெரிவுகள் விற்பனை செய்யப்படும் என்பதுடன், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதாக அமைந்திருக்கும். உள்ளக, வீல் எலைன்மன்ட் வசதிகளும் காணப்படுவதுடன், நாடு முழுவதிலும் 24 மணி நேர பழுதுபார்ப்பு சேவை வழங்கப்படும். சகல சேவை நிலையங்களிலும், சிறந்த Volvo அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், விற்பனை மற்றும் முன் அலுவலக ஊழியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு Volvoஇன் உலக நியமங்களுக்கமைய பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். 

IWS ஹோல்டிங்ஸ் தலைவர் ஆர்தர் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,“இலங்கையில் இது வரை காலமும் வேறெந்த வாகன விற்பனை நிறுவனத்தினாலும் வழங்கப்படாத ஒன்றுக்கு மேற்பட்ட சேவை அம்சங்களை நாம் எமது காட்சியறையினூடாக வழங்க முன்வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். புதிய ரக Volvo கார்களை அறிமுகம் செய்வதை எமது பெரும் பேறாக நாம் கருதுகிறோம். உள்நாட்டுச் சந்தைக்கு இது மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X