2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

WCIC உடன் AIA கூட்டாண்மை உடன்படிக்கை

S.Sekar   / 2022 நவம்பர் 18 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் தொழிற்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் (WCIC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த WCIC பிரதிபாபிஷேக–பெண்கள் தொழில்முனைவோருக்கான விருதுகள் 2022 இற்கான கோல்ட் அனுசரணையாளராக AIA இன்ஷுரன்ஸ் செயற்படுகின்றது. இலங்கையில் 2022-2023 காலப்பகுதியில் பெண்களுக்கான தொழில் முனைவுத் திட்டத்தை ஊக்குவிப்பதை WCIC மூலோபாயமாகக் கொண்டுள்ளது.

பல தசாப்தங்களாக பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் தொழில்முனைவுக்கு உதவுதல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமாகத் திகழும் AIA, WCIC இன் குறிக்கோள்களுடனான ஒரு பொதுவான நோக்கம் மற்றும் அதன் இயற்கையான ஒருங்கிணைவு ஆகியவற்றைப் பெரிதும் அவதானிக்கின்றது. இலங்கை முழுவதும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் நிதியியல் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தல் ஆகியவற்றுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்யும் தேசிய அளவிலான ஒரு அமைப்பாக WCIC செயற்படுகின்றது. AIA இன் 'அய சுரக்கின AIA’ திட்டமானது பெண்கள் ஊழியர்களாகவோ, முகவர்களாகவோ, வாடிக்கையாளர்களாகவோ அல்லது பொது மக்களாகவோ என எவராக இருந்தாலும் அவர்களின் முன்னேற்றத்திலும், பொருளாதாரச் சுதந்திரத்திலும் பங்களிப்புச் செய்கின்றது. AIA இன் WCIC உடனான ஒத்துழைப்புடனான கூட்டாண்மையின் மூலமாக பெண்களுக்குக் காப்புறுதித் தீர்வுகள், நிதி கல்வியறிவுப் பயிற்சிகள், வலையமைப்புகள், அங்கீகாரம் மற்றும் தகவல்களை அணுகுதல் மூலமாக இலங்கையிலுள்ள பெண்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள நேர்மறையான விளைவினை ஏற்படுத்துவதற்கு இது பெரிதும் உதவுகின்றது.

இலங்கையில் பெண்கள் பணிசெய்வதற்கான மிகச்சிறந்த நிறுவனமான AIA இன் அர்பணிப்பானது அனைத்து ஊழியர்களுக்குமான பாலினச் சமத்துவம் மற்றும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதாகும். கடந்த வருடத்தின் போது பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 41% வரை AIA அதிகரித்திருந்தது. வெல்த் பிளேனர்களின் விற்பனை அணியில் 47% பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுவதுடன், அதிசிறந்த 100 விற்பனை வெல்த் பிளேனர்கள் செயற்திறனாளர்களில் குறிப்பிடும்படியாக 53% பெண்கள் 50% க்கும் அதிகமான புதிய வணிகங்களை நிறுவனத்திற்காக ஏற்படுத்திக் கொடுகின்றனர்.

AIA பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி அவர்களின் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் உதவுகின்றது. நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய வேலை நேரத்தை எளிதாக்குவதிலிருந்து, கற்றல், பயிற்சி, பணி தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகள் மற்றும் தொடர்புகள் மூலமாக வளர்ச்சிப் போக்கினை இயலுமாக்குவது வரை 'பெண்களின் தலைமைத்துவப்' பண்பினை அதிகரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இதன்படி இன்று AIA இன் சிரேஷ்ட மேலாண்மையில் 21% பெண்கள் பணிசெய்வதோடு, காப்புறுதி விசேட பதவிகளில் 70% ஆன பெண்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளிலும் மற்றும் 63% ஆன பெண் ஊழியர்கள் காப்பீட்டு புள்ளிவிவர முன்னறிப்பு நிபுணத்துவப் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர்.


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X