2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Water Garden Sigiriya ஹொட்டல் திறப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய சொகுசு புட்டிக் ஓய்வு விடுதியான வோட்டர் கார்டன் சிகிரியா (Water Garden Sigiriya) அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வசீகரிக்கும் இராஜதானிய சூழலினால் கவரப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள வோட்டர் கார்டன் ஹொட்டலானது வரலாற்று சிறப்பு மிக்க மலைக்குன்று மற்றும் நிஜமான உள்நாட்டு அனுபவங்களைப் பெறுவதற்கான மிகப்பொருத்தமான இடமாக அமைந்துள்ளது.  

“இதுவொரு சுவாரசியமான பயணமாக இருந்ததுடன், ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க கூடியாகவும் அமைந்திருந்தது. எமது குழுவைச் சேர்ந்த அனைவரது பல வருட கடின உழைப்பின் பின்னர் எமது கருப்பொருளானது நாம் நினைத்ததைக் காட்டிலும் மிகச்சிறந்தப் படைப்பாக உருவாக்கியுள்ளதை காண்கையில் மகிழ்ச்சியளிப்பதுடன், உங்களுக்கும் பிடிக்கும் என நாம் எண்ணுகிறோம்” என்று  ஹொட்டல் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட Union Resorts & Spas Ltd இன் தலைவர் அஜித் விஜயசேகர தெரிவித்தார்.   

35 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வு விடுதியிலிருந்து கோட்டையைப் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. ஆறு செழுமையான வோட்டர் villa கள் உள்ளடங்கலாக 30 அதிசொகுசு villas, பார், உணவகம், நீச்சல் குளம் மற்றும் ஸ்பா போன்ற அனைத்து விதமான அலங்காரங்களும் புகழ்பெற்றக் கட்டிடக்கலை நிபுணரான சன்ன தஸ்வத்தவினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.   

“சிகிரியாவின் பூந்தோட்டத்தைப் போன்ற ஒரு பூந்தோட்டத்தையும்  நாம் இங்கு உருவாக்கியுள்ளோம். இருப்பினும், இது முழுமையாக சிகிரியா பூந்தோட்டத்தை ஒத்ததல்ல. ஆனால், அதன் வழியே நடந்து செல்கையில் 5ஆம் நூற்றாண்டில் வாழ்வதைப் போன்ற உணர்வை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்” என தஸ்வத்த தெரிவித்தார்.   

“எமது திறப்பு விழாவானது பாரம்பரிய ஹொட்டல் திறப்பைப் போன்றதல்ல, வாடிக்கையாளருக்கு பல அனுபவங்களை வழங்கக்கூடிய கொண்டாட்டமாக அமைந்திருந்தது. இந்த ஹொட்டலானது பிராந்தியத்தின் சிறந்த அமைவிடமாக அமையும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்” என விஜயசேகர தெரிவித்தார்.  

“இந்த இடத்தின் அற்புதத்தை வாடிக்கையாளர்களுக்கு உணரச் செய்யவுள்ளதுடன், உலகின் எல்லா மூளைகளிலும் வோட்டர் கார்டனின் சிறப்பம்சங்களை மரபாக உருவாக்குவதே எமது எண்ணமாகும். உலக வரைபடத்தில் வோட்டர் கார்டன் ஹொட்டலானது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்குமெனவும், எமது நாட்டிற்கான புதிய ஆரம்பமாக இதுவமையும் எனவும் நாம் நம்புகிறோம்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X