2025 ஜூலை 30, புதன்கிழமை

Zhara ஹோட்டல் RateGain பங்காண்மை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

JKCS நிறுவனத்தின் விருதுபெற்ற மென்பொருளான Zhara HSஆனது உலகளாவிய ரீதியில் விருந்தோம்பல் மற்றும் பயணம்சார் தொழில்நுட்பத் தீர்வுகள் துறையில் முதன்னிலையில் திகழும் RateGain நிறுவனத்துடன் ஒரு மூலோபாய பங்காளித்துவத்தில் இணைந்து கொண்டுள்ளது. இதன்மூலம், ஒரு விருந்தினர் முன்பதிவு செய்வது முதற்கொண்டு, ஹோட்டலில் வெளியேறிச் செல்தல் வரை மேற்கொள்கின்ற அனைத்து நடைமுறைகளுக்கும் வசதியளிக்கும் தீர்வுகள் ஒரே இடத்தில் கிடைக்கும் விதத்தில் அமைந்த முழுமையான தலைசிறந்தத் தன்னியக்க மென்பொருள் தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இது, பல்வேறு வழிகளிலுமான இணைய மூல வருமான உருவாக்கத்தின் மீது மூலதனமாக்கல் அனுகூலத்தை அளிக்கின்றது.  

கொழும்பு ஒசோ ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது இந்த பங்காளித்துவம் தொடர்பில், Zhara அணி மற்றும் RateGain நிறுவனம் ஆகியவை அறிவித்தன. இலங்கையிலுள்ள Zharaஇன் ஹோட்டல் துறைசார் வாடிக்கையாளர் அதிகம் பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

RateGain நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான டன்மயா டாஸ், தனது கருத்துக்களைத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காளித்துவம் தொடர்பாக அறிவிப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். விருந்தோம்பல் துறையில் புரட்சிகர மாற்றமொன்றை ஏற்படுத்தும் பொருட்டு, மிகச் சரியான ஒரு மூலோபாய கூட்டுமுயற்சியை முன்கொண்டு வருவதற்காக, RateGain மற்றும் ஜோன் கீல்ஸ் கம்பியூட்டர் சேர்விசஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளன. இரண்டு பங்காளிகளும் ஒன்றிணைந்து, ஒரு “தனிப் பெட்டியில்” முழுமையான ஹோட்டல் முகாமைத்துவ முறைமையை கொண்டு வருகின்ற அதேநேரத்தில், ஹோட்டல்களுக்கு ஈடிணையற்ற பெறுமானங்களையும் வழங்குகின்றன” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .