2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Zone24x7க்கு ஜனாதிபதி விருது

Gavitha   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014/15 காலப்பகுதிக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், உயர் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளுக்கான விருதை Zone24x7 சுவீகரித்திருந்தது.

இந்த வைபவம் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு Zone24x7 வழங்கி வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இவ் விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருதை 2014 மற்றும் 2015 ஆகிய காலப்பகுதிக்காக Zone24x7 வென்றிருந்ததுடன், இதன் மூலமாக புத்தாகமானத் தயாரிப்புகள் உற்பத்தி துறையில் முன்னோடியாக திகழ்வது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2003இல் நிறுவப்பட்ட தொழில்நுட்ப புத்தாக்கத் தீர்வுகள் வழங்கும் சர்வதேச நிறுவனமாக Zone24x7 Inc அமைந்துள்ளது. இதன் தலைமையகம் கலிஃபோர்னியாவின், சிலிக்கன் வெலி பகுதியில் அமைந்துள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியைப் பெற்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப நிலையமாக Zone24x7 7 பிரைவெட் லிமிட்டெட் காணப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஆய்வு நிலையம், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Zone24x7 ஐnஉ. இன் உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாக Zone24x7  பிரைவட் லிமிட்டட் திகழ்கிறது. புத்தாக்கச் சேவைகள், உட்கட்டமைப்புகள், பரிசோதனை மற்றும் மென்பொருள் பொருட்கள் பொறியியல் போன்ற சேவைப் பிரிவுகளில் முன்னணி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமாக செயலாற்றி வருகிறது.

Zone24x7 ஐ லாவன் பெர்னான்டோ நிறுவியிருந்ததுடன், தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் இவர் திகழ்கிறார். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சம்மேளனத்தின் (SLASSCOM) ஆலோசகராகவும் லாவன் திகழ்கிறார். உலகின் மூன்று முன்னணி விற்பனை நிலையங்களில் இரு நிலையங்களின் புத்தாக்கப் பங்காளராக நிறுவனம் திகழ்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த 10 வருடங்களில், இந்நிறுவனம் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2013 இல், முதலாவது விருதை தேசிய சிறந்த தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவில் வெள்ளி விருதை Zone24x7 பெற்றது. ஆசிய பசுபிக் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இணைவு விருதுகள் வழங்கும் நிகழ்வில் மெரிட் விருதையும் பெற்றுக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X