2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'Cat Connect' சாதனங்களின் அறிமுகம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற 'கொன்ஸ்ட்ரக்ட் 2014' கண்காட்சி நிகழ்வின் போது நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய இரு சாதனங்களை UTE அறிமுகம் செய்திருந்தது. இந்த கண்காட்சிக்கு தொடர்ச்சியான 6ஆவது வருடமாக பிரதான அனுசரணையை UTE வழங்கியிருந்தது.
 
இந்த கண்காட்சியின் பிரதான உள்ளம்சமாக 'Cat Connect™' சாதனம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தமது உள்நாட்டு அலுவலகங்களிலிருந்து நடமாடும் செயற்பாட்டு பகுதிகளை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலமைந்த தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகளை கொண்ட சாதனங்களிலிருந்து பெறப்படும் தரவுகளை பயன்படுத்தி பாவனையாளர்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்வார்கள். சரியான Cat Connect தொழில்நுட்பங்களின் மூலம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் செலவீனத்தில் குறைவு போன்றன ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலையான மற்றும் வெற்றிகரமான வியாபார செயற்பாடுகள் ஏற்படுத்தப்படும். 
 
இந்த கண்காட்சியின் Nபுhது அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்த மற்றுமொரு விடயமாக Netbiter™ அமைந்திருந்தது. வலு பிறப்பாக்கிகள் உள்ளடங்கலாக தொழிற்துறை சார்ந்த சாதனங்களை கட்டுப்படுத்தி மேற்பார்வை செய்ய உதவும் வகையில் இந்த சாதனங்களின் செயற்பாடு அமைந்திருக்கும். 
 
கட்டர்பில்லர் தொழில்நுட்ப நிபுணரான எம். மதுசூதன் விசேட தொழிற்துறைசார் கருத்தரங்குகளை உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு முன்னெடுத்திருந்தார். இதன் போது Cat Connect தொழில்நுட்பம் பற்றிய நேரடி விளக்கங்களையும் இவர் வழங்கியிருந்தார். எதிர்காலத்தில் நிர்மாணத்தொழில் நடைபெறும் பகுதிகளில் எதிர்பார்க்கக்கூடிய சாதனங்கள் பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார். கடந்த காலங்களில், UTE இனால் Product Link மற்றும் Accugrade போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இவற்றினால் உள்நாட்டு நிர்மாணத்துறையை சேர்ந்த கம்பனிகளுக்கு குறிப்பிடத்தக்களவு கவனத்தை ஈர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
 
புதிய தயாரிப்புகளை கருத்தில் கொள்ளும் போது Cat 320D2 hydraulic excavator ஐ UTE அறிமுகம் செய்திருந்தது. அத்துடன், அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட M315D2 Wheel excavator இயந்திரமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்களின் அதிகளவு கவனத்தை ஈர்த்திருந்த இந்த புதிய தயாரிப்புகள், 10000 சதுர அடி பரப்பளவிலமைந்த காட்சிகூடத்துக்கு பெருமளவான பார்வையாளர்களை வரச்செய்திருந்தன.  
 
UTE இனால் பல்வேறு வகையான வலு பிறப்பாக்கிகள், பொருட்கள் கையாள்கை சாதனங்கள் மற்றும் வெல்டிங் சாதனங்கள் போன்றவற்றையும் வெவ்வேறு காட்சிகூடங்களினூடாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
 
பொருட்களுக்கு மேலாக, UTE இனால் வழங்கப்படும் நவீன பயிற்சிகள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன. ஆர்வமான மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இலத்திரனியல் மற்றும் பொறியியல் பற்றிய துறைகளில் முதற்கட்ட அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
 
கொன்ஸ்ட்ரக்ஷன் 2014 கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பங்குபற்றிய ஏனைய அதிதிகளில் நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகளுக்கான அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். கொன்ஸ்ட்ரக்ட் 2014 என்பது தொடர்ச்சியான 14 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையில் கட்டர்பில்லர் தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஏக அங்கிகாரம் பெற்ற விநியோகத்தராக UTE திகழ்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X