2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

CBL விருதுகள் வழங்கும் நிகழ்வு

A.P.Mathan   / 2014 ஜூலை 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி உள்நாட்டு உணவு மற்றும் இனிப்பு உற்பத்திகளை தயாரிக்கும் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனமானது, அண்மையில் Eagle Lakeside Banquet மற்றும் Conference Hall இல் அதன் 2013/14 வருடாந்த விநியோகஸ்தர் மாநாடு மற்றும் விற்பனை நட்சத்திர விருதுகள் வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.
 
இந்த வருடாந்த நிகழ்வின் குறிக்கோள், கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்கிய கள விற்பனை படையினர் மற்றும் விநியோகஸ்தர்களை மதிப்பிடல் மற்றும் கௌரவித்தல் ஆகும். அத்துடன் கடந்த பல தசாப்தங்களாக CBL உற்பத்திகளை விநியோகிக்கும் தனிநபர்களையும் பாராட்டி அங்கீகரித்தல் ஆக அமைந்திருந்தது.
 
இந் நிகழ்வில் போது CBL நிறுவனம், குழுமத்தின் தற்போதைய வலுவான நிதி நிலைமையை உறுதி செய்து கவர்ச்சிகரமான விற்பனை இலக்குகளை எய்திய அதன் சாதனையை அறிவித்தது. இந்த வளர்ச்சியானது தொழிலாளர்கள் மற்றும் நட்சத்திர விற்பனை செயற்பாட்டாளர்களின் சாதனை மற்றும் பங்களிப்பு காரணமாகவே சாத்தியமானது என நிறுவனம் குறிப்பிட்டது.
 
CBLஇன் தலைவர் மினேக விக்ரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்ற வர்ணமயமான 2013/14 வருடாந்த விநியோகஸ்தர் மாநாடு மற்றும் நட்சத்திர விருதுகள் நிகழ்வில் பணிப்பாளர் சபை, கள விற்பனை அதிகாரிகள், நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள், CBL சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் விற்பனை பங்காளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
 
இம் மாநாட்டில் கடந்த நிதியாண்டில் கணிசமான வளர்ச்சியை காட்டிய CBLஇன் வெற்றிகரமான வர்த்தகநாமங்களான மஞ்சி, லங்காசோய், சமபோஷ, டியாரா மற்றும் ரிட்ஸ்பரி போன்றவற்றின் உற்பத்தி விளக்கக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் நிதியாண்டில் CBLஆனது, Crackers, மாரி மற்றும் லெமன் பஃப் ஆகியவற்றின் வலுவான சந்தை தலைமை ஊடாக இலங்கையின் பிஸ்கட் துறையில் மறுக்கமுடியாத தலைமைத்துவ ஸ்தானத்தை தொடர்ந்து பேணவுள்ளது. உற்பத்தி வரிசையில் வாடிக்கையாளரினால் மிக விரும்பப்படும் தயாரிப்பாக மஞ்சி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் குழுமத்திற்கு பங்களிப்பு வழங்கிய நாடுமுழுவதும் உள்ள நீண்டகால விநியோகஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாக அமைந்திருந்தது. 2013/14 நிதியாண்டில் விற்பனை இலக்குகளை அடைவதில் CBL இன் வெற்றிக்கு கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட விற்பனை படையினரின் அளப்பரிய பங்களிப்பும் கௌரவிக்கப்பட்டது. 
 
மஞ்சி பிஸ்கட்ஸ் விற்பனையில் ஈடுபடும் மாதம்பே பிரதேச விற்பனை அதிகாரி ரிஸ்வி பெர்னாட் பெர்னாண்டோவிற்கு டி பிரிவில் ஒட்டுமொத்த செயற்திறனை கௌரவிக்கும் வகையில் CBL விற்பனை நட்சத்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரிட்ஸ்பரி மற்றும் டியாரா விற்பனை செய்யும் பிலியன்தல பிரதேசத்தின் விற்பனை அதிகாரி அமித் திசாநாயக்க ஏ பிரிவில் மிகச்சிறந்த நட்சத்திர விருதினை தனதாக்கிக் கொண்டார். மேலும் லங்காசோய் மற்றும் சமபோஷ விற்பனையில் திறமையை வெளிப்படுத்திய இரத்தினபுரி பிரதேச விற்பனை அதிகாரி தரிந்து தில்ஷான் சி பிரிவில் சிரேஷ்ட நட்சத்திர விருதினை வென்றெடுத்தார். மாத்தறையைச் சேர்ந்த கனிஷ்ட பிரதேச விற்பனை அதிகாரி ஆலோக கயான் சங்சிறிகே, மூன்று பிரிவுகளிலும் கனிஷ்ட விற்பனை அதிகாரி பிரிவின் கீழ் சிறந்த செயற்திறனை வெளிப்படுத்தி சி பிரிவின் கீழ் கனிஷ்ட நட்சத்திர விருதினை வென்றெடுத்தார்.
 
CBL இற்கமைய, ஒவ்வொரு நிதியாண்டும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை குழுக்களுக்கு ஓர் தொனிப்பொருள் அறிவிக்கப்படுவதுடன், இம்முறை the game changer” – it a new beginning' எனும் புதிய தொனிப்பொருள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளைப் போல, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுவினர் எதிர்கால கூட்டாண்மை குறிக்கோள்களை நிறைவேற்றுவதாக உறுதிமொழியளித்தனர். இந்த புதிய கொள்கை அடிப்படையில், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அணிகள் குழுமத்தின் குறிக்கோள்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், அவர்களது இலக்குகளை அடைவதற்கான முறையில் திட்ட மாதிரியையும் உருவாக்கியிருந்தனர். 
 
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய குழும பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே, 'CBL ஊடாக நாம் பல்வேறு தனிநபர்களின்  வெற்றியை உறுதி செய்து வருகின்றோம். எமது விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை நட்சத்திர விருதுகள் வழங்கும் நிகழ்வு மூலம் நாம் எமது விற்பனை குழுவினை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க செய்து, தன்னம்பிக்கை மற்றும் புதுமை ஊடாக சந்தையில்; புதிய உற்பத்திகளை கொண்டு வருவதற்கான மதிப்பீடுகளை வழங்கி வருகின்றோம். ஓர் நிறுவனம் எனும் ரீதியில், நாம் வெறுமனே இலாபத்தை மாத்திரமல்லாது, நாட்டின் வளர்ச்சி மற்றும் உணவு பொருட்கள் துறைக்கு பங்களிப்பு வழங்கும் தொழிலாளர்களை கொண்டிருப்பதையிட்டு பெருமையடைகிறோம்' என தெரிவித்தார். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் திரு.விக்ரமகே குறிப்பிட்டிருந்த மஞ்சியின் சமூக பொறுப்புணர்வு திட்டம் அனைவரது கவனத்தையும் பெரிதும் ஈர்த்திருந்தது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X