2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

CDB யின் கடந்த ஒன்பது மாதத்திற்கான வரிக்கு முன்னரான இலாபம் ரூபா 541 மில்லியன்

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது, கொழும்பு பங்குச்சந்தையின் இடைக்கால முடிவுகளின் படி, கடந்த 2013 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஐந்தொகை குறிப்பு 31.6 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், இது 2013 மார்ச் 31ஆம் திகதி இறுதியாக தணிக்கை செய்யப்பட்ட ஐந்தொகையை விட 29% வளர்ச்சியை காட்டுகின்றது.

கடந்த ஒன்பது மாதத்திற்கான வரிக்கு முன்னரான இலாபம் ரூபா 541 மில்லியனாக பதிவு செய்யப்பட்டு 16% வளர்ச்சியை காட்டியதுடன், கணிசமான உயர் சேதக் கட்டணங்கள் மற்றும் வருமான வரி செலவுகள் காரணமாக வரிக்கு பின்னரான இலாபம் 429 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டு 12% வளர்ச்சியை எட்டியிருந்தது. இந் நிறுவனம் குறித்த நிதியாண்டில் பெற்றுக்கொண்டுள்ள மொத்த விரிவான வருமானம் ரூ. 621 மில்லியனாகும். அத்தோடு கடந்த ஒன்பது மாதங்களுக்கான மொத்த வருமானம் ரூபா 4.5 பில்லியன் ஆகும். அதற்கு முன்னைய இக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 47% வளர்ச்சி ஆகும். மேலும் தேறிய வட்டி வருமானம் ரூபா 1.7 பில்லியனை பெற்று 35% வளர்ச்சியை அடைந்துள்ளது.

மேலும் மொத்த வைப்பு தொகை 22.5 பில்லியன் ரூபாவை பெற்று 27% வளர்ச்சியையும், கடன் புத்தகம் ரூபா 24.4 பில்லியன் பெற்று 25மூ வளர்ச்சியையும் பெற்றுக்கொண்டு நிறுவனத்தின் அடிக்கோடிட்ட உத்வேகம் வளர்ச்சி கண்டுள்ளது. ஒன்பது மாதத்திற்கான பங்கொன்றிற்கான வருவாய் ரூ.7.90 ஆக பதிவான அதேவேளை 2013 டிசம்பர் 30 ஆம் திகதி பங்கொன்றிற்கான முக பெறுமதி ரூ.64.00 ஆக அமைந்திருந்தது.

CDB நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், 'மொத்த சொத்துப் பெறுமதி 30 மில்லியனாக அதிகரிப்பை காட்டியமையும், நாட்டின் பட்டியலிடப்பட்ட மிகச்சிறந்த ஐந்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளமையும் CDB நிறுவனத்தின் வளர்ச்சியின் இன்னுமொரு மைல்கல்லாகும். இது நாட்டின் வலிமையான நிதி நிறுவனம் எனும் ரீதியில் எமது வாடிக்கையாளர்களுக்கு முழு செயற்திறனுடன் சேவையாற்றுவதற்கான திறனை வழங்கியுள்ளது. கொமர்ஷல் வங்கியின் பிரத்தியேகமான ATM வலையமைப்புடன் தொடர்பை கொண்டுள்ள எமது 59 ஒன்லைன் தொடர்பு காட்சியறைகள் ஆனது, வாடிக்கையாளர்களின் அணுகும் வசதி மற்றும் சௌகரியத்தை வலுப்படுத்துகிறது. அத்தோடு எமது சாதனைக்கு காரணமான எமது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக பங்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்' என தெரிவித்தார்.

அண்மையில் CDB நிறுவனம், பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன்கள் வெளியீட்டின் முதல் நாளன்றே வெளியிடப்பட்ட ரூபா 1.0 பில்லியன் பெறுமதியை பெற்று மாபெரும் சாதனையை ஈட்டியிருந்தது. இது CDB நிறுவனத்தின் கூட்டாண்மை நிதிப்பிரிவின் மூலம் நிர்வகிக்கப்படும் வெளியீட்டு செயற்பாடும் மேலும் ஆரோக்கியமான மூலதன இருப்பு விகிதத்தை பேண உதவுவதுடன், நிறுவனத்தின் Tier 2 மூலதன அடித்தளத்தை வலுப்படுத்துகிறது

CDB நிறுவனம் மைய வங்கியியல் தீர்வுகளை (Core Banking Solution) செயல்படுத்திய முதலாவது, ஒரேயொரு NBFI வங்கி எனும் கௌரவத்தை பெற்றுள்ளது. பல வகைப்பட்ட நாணயத்தாள்கள், பல கிளைகள் மற்றும் எண்ணற்ற வங்கியியல் திறமைகளை உள்ளடக்கிய விரிவான நிதிச் சேவைகள் மூலம் CDB நிறுவனம் ஒன்லைன் கடன் அனுமதி, விரைவான வைப்புச் சான்றிதழ் வழங்கல் மற்றும் விடுமுறை நாட்களிலும் வட்டி திரும்பல்களை மீளப்பெறல் போன்ற சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கான சேவைத்தரத்தை மேம்படுத்துகிறது.

குறித்த நிதியாண்டில் CDB நிறுவனமானது 16 புதிய கிளைகளை திறந்துள்ளதுடன், Brussels நகரை மையமாக கொண்டு இயங்கும் பெல்ஜிய முதலீட்டு நிறுவனத்திடமிருந்து (BIO) ரூபா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை பன்னாட்டு முதலீடாக பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனம் முழுவதுமுள்ள பொறுப்பு வாய்ந்த அணியுடன் இணைந்துள்ள வலுவான விநியோக வலையமைப்பு, IT தளம், வர்த்தகநாம வாக்குரிமை, நிகரற்ற வாடிக்கையாளர் சேவைத்தரம் கொண்டுள்ள CDB நிறுவனம், நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்தியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்குவதற்கும் தயார் நிலையில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .