Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறுநாள் உங்கள் வீட்டு வாசல்களுக்கே பொருட்களை கொண்டு வந்து விநியோகிக்கும் e- வணிக சேவை வழங்குநரான Simplex Delivery, தனது செயற்பாடுகளை 2017 ஜனவரி 25ஆம் திகதி முதல் நாடு முழுவதுக்கும் விஸ்தரித்துள்ளது. மிகவும் குறுகிய காலப்பகுதியில், வாடிக்கையாளர்களின் பொருட்களை நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கும் துரிதமாக கொண்டு சென்று விநியோகிக்கும் திறனை Simplex Delivery கொண்டுள்ளது.
முக்கியமாக, Simplex Delivery விஸ்தரிப்பு செயற்பாடுகளுக்கு சிங்கப்பூர் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட உள்நாட்டு தொழில்நுட்ப சார் வியாபாரங்களில் முதலீடுகளை மேற்கொள்ளும் வென்ச்சர் கெப்பிட்டல் நிறுவனமான BOV Capital, குறிப்பிடத்தக்களவு முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. நிறுவனத்துக்கு அதன் இணை ஸ்தாபகர்களான இனாஸ் ஜனாப்தீன் மற்றும் திலின பொன்சேகா ஆகியோருடன், BOV Capital ன் பிரஜீத் பாலசுப்ரமணியம், எரிக் விக்ரமநாயக்க மற்றும் ராஜன் ஆனந்தன் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியனவும் வழங்கப்பட்டிருந்தன.
2015 ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது முதல், Simplex Delivery படிப்படியாக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. திருகோணமலையில் Daraz ஸ்ரீ லங்காவுக்கான (முன்னர் Kaymu என அழைக்கப்பட்டது) விநியோக செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது.
Daraz ஸ்ரீலங்காவின் சரக்கு கையாளல் பிரிவின் தலைமை அதிகாரி தர்ஷிக அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “Simplex Delivery என்பது Darazஇன் பெறுமதி வாய்ந்த பங்காளராக கடந்த இரு ஆண்டு காலமாக செயலாற்றி வந்துள்ளது. இதனூடாக சிறந்த சேவை மற்றும் விநியோகம் போன்றன மேற்கொள்ளப்பட்டுள்ளன. Simplex Delivery ஸ்தாபிக்கப்பட்டது முதல் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், மறுநாள் விநியோக செயற்பாடுகளை ஒன்லைன் கண்காணிப்பு சேவைகளுடன் வழங்கி வருகிறது. நிறுவனத்தினால் தொடர்ச்சியான செயன்முறை மேம்படுத்தல்கள் பின்பற்றப்படுவதுடன், சிக்கல்கள் நிறைந்த பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னரான பணத்தை பெறும் சூழல்கள் போன்றவற்றில் செயலாற்றுகின்றமை காரணமாக, Daraz க்கு தனது உயர் வாடிக்கையாளர் அனுபவ நியமங்களை பேண பங்களிப்பு வழங்குகிறது’ என்றார்.
32 minute ago
32 minute ago
36 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
32 minute ago
36 minute ago
38 minute ago