2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

GM பங்குகளை அமெரிக்க அரசு முழுமையாக விற்றது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பிரபலமான வாகன உற்பத்திநிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டர்ஸ் (GM) நிறுவனத்தில் அமெரிக்க கொண்டிருந்த இறுதித் தொகை பங்குகளையும் கடந்த திங்கட்கிழமை முழுமையாக விற்று, பங்குகளிலிருந்து விடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் அறிவித்துள்ளன.
 
இதன் காரணமாக வரி செலுத்தியோரின் பணத்தொகையில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்டிருந்த பொருளாதார சரிவு நிலையிலிருந்து முன்னணி தனியார் நிறுவனங்களை மீட்கும் வகையில் அமெரி்க்க அரசாங்கத்தினால் ஜெனரல் மோட்டர்ஸ் பங்குகள் மீது முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 
 
இந்த இறுதி பங்குகள் விற்றுத்தீர்ந்துள்ளதன் மூலம், தமது நாட்டின் வரலாற்றில் காணப்பட்ட மிகவும் முக்கியமான அத்தியாயம் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் அதிகாரி ஜாக் லோ கருத்து தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .