2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ITC Colombo One நிர்மாணத்துக்கான முன்மாதிரி விழா

A.P.Mathan   / 2014 நவம்பர் 20 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


ITC Colombo One எனும் புதிய ஹோட்டல் மற்றும் ரெசிடென்சிஸ் நிர்மாணப்பணிகளுக்கான முன்மாதிரி விழா (Groundbreaking Ceremony) நேற்று (17) கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் ITC லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் வை.சி.தேவேஷ்வர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மேலும், இந்த வைபவத்தில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, கொழும்பு மாநகர மேயர் ஜே. முஸம்மில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் இராணுவ கொமான்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எம். தயா ரத்நாயக்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.  
 
இந்த புதிய ஹோட்டல், பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலிமுகத்திடலுக்கு முகப்பாக அமையவுள்ளது. ITC Colombo One இன் முதற்கட்டத்தில் 350 அறை;கள், 130 சொகுசு குடியிருப்பு பகுதிகள், உலகத்தரம் வாய்ந்த பான்குவெட் மற்றும் சமையல் வசதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும். மேலும் முழுமையான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அலுவலக இடவசதிகளையும் கொண்டிருக்கும். கடலையும், பேர வாவியையும் முகப்பாக கொண்டமையவுள்ள இந்த ஹோட்டல், இந்து சமுத்திரம் மற்றும் கொழும்பு நகரின் தோற்றத்தை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். 
 
இந்தியாவின் மாபெரும் சொகுசு ஹோட்டல் தொடராக ITC ஹோட்டல்ஸ் அமைந்துள்ளது. ITC லிமிடெட் நிறுவனத்தின் அங்கத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் பரந்த பன்முக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மொத்த சந்தை மூலதனவாக்கம் என்பது 45 பில்லியன் டொலர்களாகும். இந்தியாவில் காணப்படும் ITC இன் வியாபாரங்களில், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்கள், கடதாசிபோர்ட்கள், கடதாசி மற்றும் பொதியிடல், விவசாய வியாபாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றன உள்ளடங்கியுள்ளன. தனது சமையல் சிறப்புக்காக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நாமமாக ITC ஹோட்டல்கள் திகழ்கிறது. Bukhara, Dum Pukht மற்றும் Dakshin போன்ற வர்த்தக நாமங்களுக்காகவும் மற்றும் அதன் ஸ்பா நாமமான Kaya Kalp என்பதும் புகழ்பெற்று திகழ்கிறது. விருந்தினர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சொகுசான முறையில் தனது சேவைகள், ஒன்றிணைக்கப்பட்ட பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை ITC ஹோட்டல்ஸ் வழங்கி வருகிறது. 
 
இலங்கையில் ITC இன் முதலீடு தொடர்பில் ITC குழுமத்தின் தலைவர் வை.சி. தேவேஷ்வர் கருத்து தெரிவிக்கையில், 'உப கண்டத்தில் இந்தியாவும் இலங்கையும் பொதுவான பாரம்பரியத்தை பின்பற்றி பேணி வருகின்றன. பலதலைமுறை உறுதியான சமூக-கலாசார உறவுகளையும் பேணி வருகின்றன. இந்த பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு ITC Colombo One என்பது நிர்மாணிக்கப்படும். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும். இந்த திட்டத்தை இலங்கைக்காகவும், அதன் எதிர்காலத்துக்காகவும் ITC அர்ப்பணிக்கிறது. இலங்கையின் விருந்தோம்பல் துறையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஹோட்டல் என்பது மேலும் மகுடம் சூட்டும் வகையில் அமைந்திருக்கும்' என்றார். 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் நிர்மாணிக்கப்படும் இந்த ஹோட்டல், ITC இன் முதலாவது வெளிநாட்டு சொகுசு ஹோட்டலாக அமையவுள்ளது. 
 
ITC Colombo One என்பது இலங்கையின் உயர்ந்த கலாசார முறைமையை பின்பற்றி அமையவுள்ளது. இதன் வரலாறு மற்றும் நிர்மாண கட்டமைப்பு போன்றன உயர்தர சூழல் வடிவமைப்புடன் பிரத்தியேகமாக அமையவுள்ளது. இந்த ஹோட்டல் LEED பிளாட்டினம் தரப்படுத்தலை பெற்றுக் கொள்ளவுள்ளது. இதன் மூலம், ITC இன் வியாபார கையாள்கை என்பது 'பொறுப்புவாய்ந்த சொகுசு' என்பதற்கமைவாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்கிறது.  


 
ITC ஹோட்டல்ஸ் பற்றி
இந்தியாவின் முன்னணி ஹோட்டல் தொடர்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன், 70 பகுதிகளில் 100க்கும் அதிகமான ஹோட்டல்களை கொண்டுள்ளது. விருந்தோம்பல் துறையில் புதிய கலை அம்சத்தை ITCஇன் ஹோட்டல் பதித்துள்ளது. நான்கு வர்த்தக நாமங்களில் ITC தனது ஹோட்டல் செயற்படுத்தி வருகிறது. சொகுசு பிரிவில் 'ITC Hotel', 5 நட்சத்திர பிரிவில் 'WelcomHotel', மத்தியளவு மற்றும் மேல்மட்ட சந்தைகளுக்காக 'Fortune' மற்றும் பாரம்பரிய ஓய்வு பிரிவில் 'WelcomHeritage' போன்றன அவையாகும். 
 
ITC இன் மும்முனை கொள்கையான பொருளாதார, சூழல் மற்றும் சமூக சார் கட்டமைப்புகளை உருவாக்குவது என்பதற்கமைவாக, அதன் ஹோட்டல்கள் சொகுசான அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 
 
இந்தியாவின் ஹோட்டல் துறையில் பெருமளவு முதன்நிலை அறிமுகங்களை ஏற்படுத்தியுள்ள ITC ஹோட்டல்ஸ், தங்குமிடம், சந்தை தன்மைக்கேற்ப அறை பிரிவுகள் சங்கிலி தொடர் அடிப்படையில் சர்வதேச உடன்படிக்கைகள், நாட்டின் முதலாவது அடிக்கடி விஜயம் செய்யும் விருந்தினர்களுக்கான லோயல்டி திட்டம், வர்த்தக நாம பட்டியலிடப்பட்ட சமையல் உணவகங்கள், ஹோட்டலினுள் ஹோட்டல் எனும் விசித்திரமான கொள்கையையும் முதன் முதலில் அறிமுகம் செய்திருந்தது. 

ITC லிமிடெட் பற்றி
இந்தியாவின் முன்னணி தனியார் துறை கம்பனிகளில் ஒன்றாக ITC திகழ்கிறது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்கள், கடதாசிபோட்கள் மற்றும் பொதியிடல், விவசாய வியாபாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. சந்தை மூலதனவாக்க பெறுமதி 45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. புரள்வு பெறுமதி 7 பில்லியன் டொலர்களாகும். நுகர்வோர் பொருட்கள் பிரிவில் சர்வதேச ரீதியில் 'சிறந்த 10 நிலையான பெறுமதி சேர்ப்பாளர்கள்' எனும் தரவரிசையில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலை Boston Consulting Group (BCG) வழங்கியுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X