2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

IWS Aviation அறிமுகப்படுத்தும் பிரத்தியேக ஹெலிகொப்டர் சேவைகள்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூலோபாய இலாகாக்களை பேணி வரும் இலங்கையின் மிகப்பெரிய பன்முக நிறுவனங்களில் ஒன்றான IWS ஹோல்டிங், அண்மையில் உள்நாட்டு ஹெலிகொப்டர் செயற்பாடுகளை அறிமுகம் செய்திருந்தது.
 
Bell 206 B-3 ரக ஜெட் ரேன்ஜர் ஹெலிகொப்டரானது தனது வணிக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கும் வகையில் IWS, இரத்மலானை விமான நிலையத்திலுள்ள அதன் செயற்பாட்டு தலைமையகத்திலிருந்து Bell 206 ரக ஹெலிகொப்டர் ஊடாக சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
 
இந்த உலங்குவானூர்தி வளி சீராக்கலை முழுமையாக தாங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகொப்டரில் பயணிகள்; மற்றும் ஒரு விமானிகளுக்கான 4 இருக்கைகள் காணப்படுகின்றன. இதில் 3 இருக்கைகள் பின்புறத்திலும், 1 இருக்கை விமானிக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த உலங்குவானூர்தி சுமார் 100 Knots வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
 
IWS Aviation நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மிக்க தொழில்நுட்பவியலாளர்கள், அனுபவம் வாய்ந்த இந்த உலங்குவானூர்தி ஓட்டிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கூட்டாண்மை நபர்கள் மற்றும் வியாபார பிரதிநிதிகளுக்கு தங்கள் ஹெலிகொப்டர் சேவைகளை வழங்கவுள்ளனர்.
 
இந் நிறுவனமானது உள்நாட்டு இந்த உலங்குவானூர்தி சேவையை scenic விமானங்கள், தனியார் மற்றும் விஐபி இடமாற்றங்கள், City hopping, விசேட உல்லாச விமானங்கள் (உ+ம்: விசேட திருமணங்கள்/ தேன்நிலவு ஆயத்தங்கள்), வான்வழி ஆய்வுகள், வான்வழி புகைப்படங்கள் மற்றும்/ அல்லது படப்பிடிப்புகள், சர்வதேச விமான நிலைய இடமாற்றங்கள் (உள்நாட்டில் மட்டும்) விளையாட்டு மற்றும் செய்தி தொகுப்புகள், சமய சடங்குகள் (மலர்களை தூவுதல்), கப்பலிலிருந்து கரையோரம் வரையான செயற்பாடுகள் மற்றும்/ அல்லது எண்ணெய் ஆய்வுச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
வாடிக்கையாளரின் தேவைகளை நன்குணர்ந்துள்ள IWS Aviation, தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் விருப்பத்திற்கேற்ற பேக்கஜ்ஜுகளை வழங்கவுள்ளது.
 
தமது புதிய ஹெலிகொப்டர் சேவைகள் குறித்து IWS ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஆர்தர் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'ஹெலிகொப்டர் சேவைகள் மூலம் வியாபார நிபுணர்களுக்கும், விடுமுறையை கழிப்பவர்களுக்கும் விரைவானதும், நெகிழ்ச்சியானதுமான சேவைகள் வழங்கப்படவுள்ளன. ஹோட்டல்கள் மற்றும் தாங்கள் விரும்பும் இடங்களில் சௌகரியமாக தரையிறங்கும் வசதிகளை கொண்டுள்ள ஹெலிகொப்டர்கள் மூலம் வழங்கும் எமது சேவைகள் வியாபார நிர்வாகிகள் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் உள்ளவர்கள் மத்தியில் பிரபல்யமடையும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.
 
இடஒதுக்கீடுகளை www.iwsaviation.com எனும் இணையத்தளம் மூலமாகவும் அல்லது IWS தலைமைகாரியாலயத்திலும் மற்றும் இரத்மலானை விமான நிலையத்திலுள்ள செயற்பாட்டு நிலையத்திலும் மேற்கொள்ளலாம். மேலும் இந்நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணையத்தளம் ஊடாகவும் இடஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்ஸுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளது. 
 
ஆகாய போக்குவரத்து பிரிவில் துணிகரமான நுழைந்துள்ளமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது சேவைகள் பெறுமதியை சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஹெலிகொப்டர் வர்த்தகத்தில் பரந்தளவில் அனுபவம் கொண்டுள்ள எமது திறமை வாய்ந்த குழுவினருடன் நாட்டின் முன்னணி ஹெலிகொப்டர் சேவை வழங்குனராக எமது பிரசன்னத்தை நிலைப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றோம்' என மேலும் சேனாநாயக்க தெரிவித்தார்.
 
இந்த உலங்குவானூர்தி சேவைக்கான கொடுப்பனவுகளை பணம், வங்கி மாற்றங்கள், காசோலைகள் மற்றும் கடனட்டை (வீசா/ மாஸ்டர்) மூலமாக மேற்கொள்ள முடிவதுடன், உலங்குவானூர்தி பயணத்தை உறுதிப்படுத்த முழுத்தொகையும் செலுத்துதல் கட்டாயமானதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X