Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டின் கீர்த்திமிக்க உயர்கல்வி நிறுவனமான lnternational lnstitute of Health sciences (llHS) நிறுவனம், உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.
தாதியியல் (Nursing), உடற்கூற்று சிகிச்சை (Physiotherapy) மற்றும் உயிர் மருத்துவவியல் (Bio Medical Science) ஆகிய பிரிவுகளில் டிப்ளோமா, பட்டம் மற்றும் பட்டப்பின் படிப்பு பாடநெறிகள் போன்றவற்றையே ஆரம்பிக்கவுள்ளது.
இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சை நிறைவடைந்த கையோடு, மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கி உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்துக் கொண்டு llHS நிறுவனம் இந்தப் பாடநெறிகளை ஆரம்பித்துள்ளமையானது, விசேட அம்சமாகும். இதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்புடைய மேலதிக தகவல்களை, இல. 704, நீர்கொழும்பு வீதி, வெலிசர என்ற முகவரியில் அமைந்துள்ள llHS நிறுவனத்துக்கு சமூகமளித்து பெற்றுக்கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
llHS நிறுவனம் மேற்கொள்ளவுள்ள இந்தப் பாடநெறிகள் அனைத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் வாய்ப்பை llHS நிறுவனம் நம் நாட்டு மாணவ, மாணவிகளுக்கு பெற்றுக் கொடுக்கிறது.
இந்தப் பாடநெறிகளுக்காக மாணவ, மாணவிகளால் முதலீடு செய்யப்படும் பணத்தை, படிப்பு முடித்த பின்னர் சர்வதேச மட்டத்திலான தொழில் வாய்ப்புக்களை பெற்று சில மாதகாலத்துக்குள் உழைத்துக்கொள்ள முடியும். llHS ஊடாக மேற்கூறிய பாடநெறிகளை முன்னெடுக்கும் மாணவ, மாணவகளுக்கு அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அதிகளவான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
49 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
3 hours ago