2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

LMD தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ள SLIIT கல்வியகம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 06 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


புகழ்பெற்ற வணிக இதழான LMD மூலம் இந்நாட்டு உயர்கல்வி நிலையங்கள் தரப்படுத்தலில் இலங்கையின் உயர்கல்வி நிலையங்களுள் முதலிடத்தை இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம் (SLIIT) தெரிவு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற TNS லங்கா நிறுவனத்தின் தரப்படுத்தல் செயற்பாடானது LMD மூலம் நடத்தப்பட்டது.

உள்நாடு மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு பட்டதாரி கற்கைநெறிகள், புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான தொடர்பு, உலகளவில் நன்கறியப்பட்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் தகைமைகள் மற்றும் அங்கீகாரம், பரந்துபட்ட கற்கைகள், புலமைப்பரிசில், விளையாட்டுக்கள் மற்றும் இதர செயற்பாடுகள் ஆகியவற்றின் சிறப்புத்தன்மை காரணமாக SLIIT முதலிடத்தை பெற்றது.

40 கல்வியகங்களை பின்தள்ளிவிட்டு SLIIT முதலிடத்தை பெற்றுக்கொண்டது. 697 புள்ளிகளை பெற்ற சிலோன் ஜேர்மன் டெக்னிக்கல் பயிற்சி கல்வியகம் இரண்டாவது இடத்தையும், NIBM, British College of Applied Studies மற்றும் Aquinas College of Higher Studies ஆகியன முறையே 695, 655, 642 புள்ளிகளை பெற்று முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடத்தினை பெற்றுக்கொண்டன.

இத் தரப்படுத்தல் குறித்து SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பேராசிரியருமான லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 'முதலிடத்தில் தெரிவானதையிட்டு நாம் பெரு மகிழ்ச்சியடைவதுடன், இது மலேசியாவைப் போன்று இலங்கையை கல்வி மையமாக உருவாக்கும் எமது நோக்கத்திற்கு வலுசேர்ப்பதகாக அமைந்துள்ளது' என்றார்.

மேலும் பேராசிரியர்.கமகே தெரிவிக்கையில், 'இது எமது கல்வியகத்திற்கு திருப்புமுனையாகும். எமது கல்வித்திட்டங்களை விஸ்தரித்தல், R&D மேம்படுத்தல்கள் மற்றும் எமது கல்வியகம் மற்றும் கற்கைநெறிகளை சர்வதேசமயமாக்குதல் ஆகியவற்றினூடாக பிராந்தியத்திலுள்ள சிறந்த 10 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக எம்மை நிலைப்படுத்துவதே எமது எதிர்கால திட்டமாகும்' என்றார்.

'எமது கல்வியகத்திலுள்ள கலை கட்டிடங்கள், ஆய்வுகூடங்கள், வாசிப்பறைகள் மற்றும் விரிவுரை மண்டபங்கள் ஆகியன சிறந்த கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கின்றன. கற்றல் செயற்பாட்டை மாத்திரமன்றி விளையாட்டு போன்ற இதர செயற்பாடுகளின் மூலமாகவும் மாணவர்களின் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வருகின்றோம்' என SLIIT இன் தலைவர் பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.

20 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான் SLIIT இன் இணைவு மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற IT, பொறியியல் மற்றும் வணிக முகாமைத்துவத்தில் இளநிலை மற்றும் முதுகலை கற்கைகள் வழங்கப்படுகின்றன. SLIIT கல்வியகமானது விசேட தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்பம், Computer Systems மற்றும் நெட்வொர்கிங், மென்பொருள் பொறியியல், Interactive ஊடகம் மற்றும் Information Systems துறைகளில் நான்கு வருட கௌரவ B.Sc பட்டதாரி கற்கைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் விசேட சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்துடன் வணிக முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் நிதி, மனிதவள முகாமைத்துவம், தர முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகள் துறைகளில் நான்கு வருட BBA. விசேட கௌரவ பட்டதாரி கற்கைகளும் வழங்கப்படுகின்றன. பொறியியல் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் சிவில், மெக்கானிக்கல், Material, மின் மற்றும் மின்னணு பொறியியல் மற்றும் எந்திரவியல் ஆகிய துறைகளில் நான்கு வருட B.Sc பொறியியல் (கௌரவ) பட்டதாரி கற்கைகளை தொடர முடியும். மேலும் SLIIT ஆனது, மைக்ரோசொஃப்ட், IBM மற்றும் CISCO சிஸ்டம்ஸ் உடன் இணைந்து சான்றளிக்கப்பட்ட தொழில்சார் நிபுணத்துவ அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

மேலும் கர்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் என்பன SLIIT உடன் இணைந்து பல்வேறு பட்டதாரி கற்கைகளை முன்னெடுத்து வருகிறது. கர்டன் பல்கலைக்கழகத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் B.Sc கற்கை, கணினி முறைமைகள் மற்றும் நெட்வொர்கிங், மென்பொருள் பொறியியல், மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் BEng பட்டம், சிவில் மற்றும் கட்டுமான பொறியியல், மின் மற்றும் வலு பொறியியல், கணினி முறைமைகள் பொறியியல் போன்ற பட்டதாரி கற்கைநெறிகளை வழங்குகிறது. UK ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகமானது வணிக முகாமைத்துவத்தில் BBA (கௌரவ) பட்டம், மின்னணு பொறியியலில் B.Eng (கௌரவ) பட்டதாரி கற்கை மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியலில் MEng கற்கை போன்றவற்றை வழங்குகிறது.

SLIIT கல்வியகத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள உதவியாக தொழில் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. அதியுயர் நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரை கொண்ட SLIIT நிலையத்தின் அனைத்து மாணவர்களும் பட்டதாரியாகி ஒரு வருடத்தினுள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக அமைப்பின் உறுப்பினராக SLIIT உள்ளது. இத்தகைய அங்ககீகாரத்தை பெற்ற இலங்கையின் ஒரேயொரு தனியார் உயர்கல்வி நிலையம் SLIIT ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் பிரவேசியுங்கள் www.sliit.lk அல்லது 0112413900 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .