
Eco Corp Asia நிறுவனம் இலங்கையிலுள்ள கைத்தொழில்துறையில் இரண்டு வருடகாலமாக மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டின் பலனாக எமது அன்றாட நடவடிக்கைகளில் முக்கியமான மாற்றமொன்றை மேற்கொள்ளக்கூடிய Nano தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Nanopool கண்ணாடித் திரவமொன்றை உற்பத்தி செய்து சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
Nanopool கண்ணாடித் திரவமானது பொருட்களில் மேற்பரப்பிற்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு தயாரிப்பாகும். இந்த Nanopool ஆனது ஒரு கண்ணாடி போன்ற திரவமாக உள்ளதுடன் அது மனிதனது தலையிலுள்ள ஒரு முடியின் அளவை விட 500 மடங்கு மெல்லியதாகும். அது மனித மற்றும் விலங்குகளின் உடலுக்கு மட்டுமன்றி சுற்றாடலுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பொருட்களுக்கு வழங்கும் பாதுகாப்புக்கு மேலதிகமாக Nanopool கண்ணாடித் திரவத்தின் ஊடாக புதிய பொழிவையும் அவை துருபிடிப்பதில் இருந்தும் பாதுகாக்கும். அத்துடன் பொருட்கள் மீது கிருமிகள் அல்லது பூஞ்சனம் பிடிப்பதையோ தவிர்த்துக் கொள்ள முடிவதுடன், பக்றீரியா மற்றும் ஈரளிப்புத் தன்மையில் இருந்தும் பொருட்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். திராவக வகை, கறைகள் ஆகியவற்றை படியவிடாது மிகவும் இலகுவாகவும், துரிதமாகவும் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.
இதுதொடர்பாக Nanopool GmbH இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Shascha Schwindt கருத்து தெரிவிக்கையில், '21ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகின்றன. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எட்ட முடியாத எல்லைகளை இந்த Nanopool தொழில்நுட்பத்தின் மூலம் எட்ட முடிந்துள்ளது. இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்துள்ளது' என்றார்.
இந்த திரவத்திலுள்ள விசேடத்துவமானது, கண்ணாடி, உலோகம், தளபாடம், கண்ணாடி பீங்கான், பிளாஸ்டிக், கல், ஆடை வகைகள், இரும்பு ஆகிய பொருட்கள் மீது பூசுவதன் மூலம் பொருட்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு புதுப்பொழிவும் கிடைக்கும். தொழிற்சாலைகள், உணவு தயாரிப்பு மத்திய நிலையங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் கிருமிகள் அதிகமாக இலகுவாக தொற்றக்கூடிய பொருட்களுக்கு இந்த Nanopool திரவத்தைப் பயன்படுத்துவது இலாபமாக இருப்பதோடு பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
Nanopool GmbH நிறுவனத்தின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் Eco Corp Asia எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கை எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பாக முதலீடு செய்வது மட்டுமன்றி நிறுவனத்தை புதிய பாதைக்கு இட்டுச் செல்வதற்கும் இத்திரவம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எய்ட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன் Nano தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதார சேவை உற்பத்தித் துறை, ஆடைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகள் மற்றும் எமது இணை நிறுவனங்களுக்கும் நன்மை பயக்குவதாக அமையும். எய்ட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி. நிறுவனம் பெற்றுள்ள விசேட தொழில்நுட்ப அறிவை Eco Corp Asia நிறுவனத்திடம் உள்ள திறமைகளை ஒன்றிணைத்து கதிர்கால தலைமுறையினருக்கு Nanopool என்ற சொல்லை எம நாட்டிலுள்ள மக்களின் வாய்களில் பழக்கமாக வரும் சொல்லாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த Nanopool நிறுவனத்தினத்தின் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Eco Corp Asia நிறுவனத்தின் தலைவர் மனிலால் பெர்னாண்டோ 'Nano தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பகுதியாக அமையும். நாம் ஆரம்பித்திருக்கும் இந்த செயற்பாடு ஒரு ஆரம்பம் தான். இவ்வாறான தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்க தேவையான அறிவுத் திறனை சேமித்து வைத்திருக்கிறோம். கடந்த இரண்டு வருடமாக உள்ளுர் நிறுவனங்களுடன் இந்த Nanopool கண்ணாடித் திரவத்தின் பயன்பாட்டை பரிசீலித்திருக்கிறோம். அதனால் அது வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதனால் பாரிய சந்தைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்ததுடன் தொழிற்சாலைகளின் பல்வேறு உபயோகங்களுக்கு உறுதுணையாக அமையும் என நம்புகிறேன்' என்றார்.
Nanopool GmbH நிறுவனம் 2002ஆம் ஆண்டு தொடக்கம் ஜேர்மனியின் ஷ்வோல்பெச் நகரில் நடத்தப்பட்டு வரும் வர்த்தக நிறுவனமாகும்.
Eco Corp Asia நிறுவனம் இலங்கையின் தொழிற்சாலைத் துறைகளுக்கு மற்றும் நுகர்வோருக்காகவும் சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற் கொண்டு புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். அது நுகர்வோருக்கு குறைந்த விலையில், சுகாதாரத்துடன் கூடிய வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதோடு உலகளாவிய பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளும்.