2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'OnThree20' அடுக்குமாடி '400 குடியிருப்புக்கள்' எனும் எல்லைக்கோட்டை கடந்தது

A.P.Mathan   / 2014 ஜனவரி 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜோன் கீல்ஸ் லாண்ட் நிறுவனமானது, யூனியன் பிளேஸில் உபாய ரீதியாக அமைக்கப்பட்ட தனது 'OnThree20' எனும் வானுயர்ந்த அடுக்குமாடி குடிமனைத் தொகுதியின் விற்பனையை பொறுத்தமட்டில், மொத்தக் குடியிருப்புக்களில் 415 குடியிருப்புக்கள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதாக இன்று அறிவித்துள்ளது. 
 
'மொத்தமாக விற்றுத் தீர்ப்பதற்கு இன்னும் 60 குடியிருப்புக்களே மீதமாக இருக்கின்றன. அவையும் மிகக் குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் விற்கப்பட்டு விடும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம்' என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பிரதித் தலைவரும், ஜோன் கீல்ஸ் குழும சொத்துக்கள் பிரிவின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகரியுமான திருமதி ரோஷானி ஜயசுந்தர மொறாயஸ் அவர்கள் தெரிவித்தார். 
 
பரபரப்பான தலைநகரும் வர்த்தக மாவட்டமுமாக திகழும் கொழும்பின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'OnThree20' அடுக்குமாடித் தொகுதியானது 'கொழும்பு நகர மத்தியிலமைந்த ஒரு பாலைவனச்சோலை' என வர்ணிக்கப்படுகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சொத்து தொடர்பான வணிகப் பிரிவாக திகழும் ஜோன் கீல்ஸ் லாண்ட் நிறுவனத்தின் மனநிறைவைத் தருகின்ற மற்றுமொரு நவீன குடியிருப்புத் தொகுதி அபிவிருத்தித் திட்டமாக இது அமைகின்றது. 475 குடியிருப்புக்களை உள்ளடக்கிய ஒவ்வொன்றும் 37 மாடிகளைக் கொண்ட மூன்று கோபுரங்களை இந்த அடுக்குமாடித் தொகுதி உள்ளடக்கியுள்ளது. அதேவேளை ஹோட்டல்கள், சுப்பர் மார்க்கட் விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கு மிகவும் அண்மித்ததாகவும் அமைந்துள்ளது. 
 
நேர்த்தி மற்றும் நவீன காலத்திற்கேற்ற பண்புகளை ஒருங்கே கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள 'OnThree20' அடுக்குமாடித் தொகுதி, அதனோடு சமகால வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதிகளை ஒன்றாக இணைத்துள்ளது. உண்மையில் நவீன வாழ்க்கை முறை தொடர்பான எதிர்பார்ப்புக்கு பொருந்தும் விதத்திலேயே இந்த குடிமனை கட்டிடத் தொகுதி நேர்த்தியான முறையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்படுகின்ற உலக நடப்புகளுக்கேற்ற கட்டிடக் கலை நுட்பம் மற்றும் சமகாலத்திற்கு அவசியமான வசதிகள் போன்றன தலைநகரில் வசிப்பதற்கு மிகப் பொருத்தமான இடமாக இதனை மாற்றியமைக்கின்றன.
 
'இந்த செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்ற அதேநேரம், 2014ஆம் ஆண்டின் இறுதியில் இதனை முடிவுறுத்துவதற்கும் நாம் திட்டமிட்டிருக்கின்றோம். இந்த செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பெருமளவான ஆர்வம் உருவாகியிருந்தது. எமது விற்பனை நடவடிக்கைகள் விரைவாக முன்னேறிச் செல்வதற்கு அது பங்களிப்புச் செய்துள்ளது. தலைநகரில் மேலும் பல செயற்றிட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவுசெய்த எமது ஜோன் கீல்ஸ் லாண்ட் எனும் வர்த்தக குறியீட்டின் மீது கடந்த பல வருடங்களாக வாடிக்கையாளர்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கின்றமை குறித்து நாம் ஆழ்ந்த திருப்தி அடைகின்றோம்' என்று திருமதி மொறாயஸ் மேலும் தெரிவித்தார். 
 
'OnThree20' அடுக்குமாடிக் கட்டிடத்தொகுதி பிரதானமாக இரண்டு முதல் மூன்று வரையான படுக்iகையறைகளை கொண்டதாக அமைந்துள்ளன. இப் படுக்கையறைகள் 907 சதுர அடி தொடக்கம் 1312 சதுர அடி வரையான பரப்பளவைக் கொண்டவையாக உள்ளன. இங்குள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களுள் - அரை ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்துள்ள இயற்கைத் தோற்றமுள்ள பூந்தோட்டம், ஒரு வணிக நிலையம், ஒரு நடை பாதை, ஒரு மிகவும் முன்னேற்றகரமான உடற்பயிற்சி மையம், ஒரு நீராவி பிடிக்கும் அறை, ஒரு ஸ்குவாஷ் விளையாட்டுத் தளம், ஒரு உள்ளக விளையாட்டு அறை, ஒரு பெரிய கழக இல்லம் போன்றனவும் உள்ளடங்கும். 
 
செழிப்பான பசுமைக்கு மத்தியிலமைந்த மூன்று நீச்சல் தடாகங்கள் மற்றும் மேலும் பல வசதிகளையும் இக் குடிமனைத் தொகுதி கொண்டுள்ளது. இதன்மூலம், கொழும்பு நகரின் இதயத்தில் அமையப்பெற்ற ஒரு 'பசுமை நுரையீரலாக' (Green Lung) இந்த அடுக்குமாடிக் கட்டிடத் தொகுதியானது திகழ்கின்றது. இவற்றிற்கு மேலதிமான சௌகரியத்தை வழங்கும் விதத்தில் - காற்று சீராக்கி, சுடுநீர், 24 மணிநேர பாதுகாப்பு, வாகனத் தரிப்பிட வசதி, Standby Power மற்றும் ஏனைய அபரிமிதமான நவீனகால வசதிகள் அனைத்தையும் இக் குடிமனை தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறான சிறப்பம்சங்கள், கொழும்பிலுள்ள மிகவுயர்ந்த குடிமனைத் தொகுதிகளில் ஒன்றாக 'OnThree20' இனை மிளிரச் செய்கின்றன. 
 
'OnThree20' அடுக்குமாடித் தொகுதியின் உருவாக்குனரான ஜோன் கீல்ஸ் லாண்ட் (John Keells Land) நிறுவனம் ஆனது, மிகப் புகழ்பெற்ற கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் ஒரு உப நிறுவனமாகும். 'OnThree20' ஆனது, குழுமத்தின் மூன்றாவது அபிவிருத்தித் திட்டமாக அமைவதுடன் மேலும் பல செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இலங்கையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய கம்பனியாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் திகழ்கின்றது. அத்துடன் பிட்ச் ரேட்டிங் லங்கா லிமிட்டெட் இடமிருந்து AAA(lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு, விடுமுறைகால வசதிகள், சொத்து, நுகர்வோர் பொருட்கள் மற்றும் சில்லறை வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் சேவைகள் போன்ற துறைகளில் இக் குழுமமானது வணிக ரீதியிலான ஆர்வத்தைக் கொண்டியங்குகின்;றது. 
 
இச் செயற்றிட்டம் தொடர்பான விபரங்களை www.onthree20.com என்ற இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .