Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வீட்டின் பின்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பாறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரகஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் உறுப்பினர், ஹொரண பிரதேச சபையின் பிரதிநிதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான அந்த பெண்ணும் அவரது பேரனும் புதையல் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், ஒரு ஹில்டி இயந்திரம், பல உளிகள், பல கம்பி வடங்கள் மற்றும் சமாதான சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வெற்றிலை, களிமண் விளக்கு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டனர்.
மொரகஹேன பொலிஸாருக்கு 119 அவசர அழைப்புப் பிரிவு மூலம் ஒரு பெண் மற்றும் பலர் அவரது வீட்டின் பின்னால் உள்ள ஒரு பாறையை வெடிக்கச் செய்து புதையல் தோண்டி வருவதாக வந்த தொலைபேசி செய்தியைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணையும் அவரது பேரனையும் சம்பவ இடத்திலேயே கைது செய்ய முடிந்தது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago