.jpg)
அண்மையில் SLIIT கல்வி நிலையத்தின் வர்த்தகப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட '2013 தகவல் அமைப்பு மற்றும் வணிக மேலாண்மை மாணவர் மாநாடு' (ISBMSC)ஆனது SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தின் அரங்கத்தில் நடைபெற்றது.
பணியிடத்தில் மென்மையான திறன்களை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தொடர்ந்து 7வது ஆண்டாக முன்னெடுக்கப்பட்ட இம் மாநாட்டின் தொனிப்பொருளாக 'Re-shaping Tomorrow’s Destiny' ஆக அமைந்திருந்தது.
இந் நிகழ்வின் பிரதான விருந்தினராக கலந்து கொண்ட மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க, கௌரவ விருந்தினராக பங்கேற்ற ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிர்வாக துணை தலைவரும், SLASSCOMஇன் தலைவருமான சுஜீவ தேவராஜா மற்றும் டாக்டர் ரவிந்திரநாத் ஆகியோர் மாநாட்டின் தொனிப்பொருளிற்கு அமைய உரையாற்றினர். மேலும் இம் மாநாட்டில் இலங்கையில் விருது வென்ற நிபுணத்துவ பேச்சாளரான தனஞ்சய ஹெட்டியாராச்சி அவர்கள் உத்வேகத்துடன் உரை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் முன்னணி துறைசார் பிரமுகர்களின் பங்குபற்றல்களின் பின்னர் 'IT alone is not sufficient to run a business' எனும் சமகால தலைப்பின் கீழ் கலந்துரையாடல்களும், 'பட்டதாரி கற்பிதங்கள் மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள்' எனும் தலைப்பிற்கமைய கருத்தரங்குகளும் நடைபெற்றன.
