
இந்தியாவின் B2B கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் என்டர்பிரைசிங் ஃபெயார்ஸ் இந்தியா பிரைவேற் லிமிடெட், இலங்கையின் பிளாஸ்ரிக் மற்றும் இறப்பர் கல்விகயத்துடன் இணைந்து ளுSRILANKA PLAST (www.srilankaplast.com) எனும் பிளாஸ்ரிக் கண்காட்சியையும், RUBEXPO (www.rubexpo.com) எனும் இறப்பர் கண்காட்சியையும் SIMEX (www.slmex.in) எனும் இலங்கை சர்வதேச உற்பத்தி எக்ஸ்போ கண்காட்சியையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய திகத்தில் இடம்பெறும். இந்த கண்காட்சியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்திருந்தார். கௌரவ அதிதிகளாக தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சர் றிசார்ட் பதியுதின் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை. கே. சின்ஹா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பிளாஸ்ரிக், இறப்பர் மற்றும் உற்பத்தி ஏற்றுமதி என்பது B2B கண்காட்சிகளாக அமைந்துள்ளதுடன், இந்தியா, சவுதி அரேபியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், சீனா, தாய்வான், ஜப்பான், இத்தாலி, பிலிப்பீன்ஸ், மலேசியா ஆகிய 15 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 160க்கும் அதிகமான காட்சியாளர்கள் பங்கேற்று, தமது இயந்திர சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வகைகளை வெளிக்காட்டியிருந்தனர்.
ஏற்பாட்டாளர்கள் சார்பாக என்டர்பிரைசிங் ஃபெயார்ஸ் இந்தியா பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான பி.சுவாமிநாதன் கருத்து வெளியிடுகையில், 'ஸ்ரீலங்கா பிளாஸ்ட் இரண்டாவது வருடமாக இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளதுடன், முதற் தடவையாக RUBEXPO மற்றும் SIMEX ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கண்காட்சிகள் அனைத்தும் வர்த்தகங்களுக்கிடையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவித்து, உறுதியான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இலங்கை 2020 இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்வதற்கு உதவியாக அமையும்' என்றார்.