2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்புடன் THASL கைகோர்ப்பு

A.P.Mathan   / 2015 ஜனவரி 06 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு (LBCH) அமைப்பு, உறுப்பினர்கள் மத்தியில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளுடன். அண்மையில் இலங்கை ஹோட்டல்கள் சங்கத்துடன் (THASL) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 

THASL சார்பாக அதன் தலைவர் ஹிரன் குறே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இதற்கமைய, தமது ஒவ்வொரு உறுப்பினர்களும் LBCH இன் சேவையை பெறுவதை உறுதி செய்யும் வகையில் அதன் பிராந்திய அமைப்புக்களுடன் இணைந்து THASL செயற்படவுள்ளது. 

LBCH அமைப்பானது நாட்டில் எச்ஐவி மற்றும் எயிட்;ஸ் நோய் பரவுவதை தடுக்கும் நோக்குடன் அதன் அங்கத்துவ நிறுவனங்கள் மத்தியில் இலவச கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. LBCH அமைப்பு, 2015ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மீது கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்கான அதிக அபாயம் நிலவுகிறது. THASL ஆனது, தொழிற்துறையில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவித்து வரும் LBCH உடன் இணைந்து செயற்படுவதில் முன்னோடியாக உள்ளது. LBCH அமைப்பானது அண்மையில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, இந்த நோய் பரவுவதை தடுப்பதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்து குறிப்பாணையை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகின் பிற இடங்களில் இந்நோய் குறைவடைந்து வரும் நிலையில் இலங்கையில் அதற்கு நேர் மாறாக எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய் பரவுதல் அதிகரித்துச் செல்கின்றது என LBCH குறிப்பாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலாபநோக்கமற்ற நிறுவனமான LBCH ஆனது, சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுபாட்டு திட்டம், தொழில் அமைச்சு, ILO, UNAIDS, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழிலாளர் சம்மேளனம் போன்ற தனியார் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X