
Ashland Inc.(NYSE: ASH) நிறுவனத்தின் வர்த்தக பிரிவு Ashland Consumer Markets மூலம் அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சம்பியன் விநியோகஸ்தர் விருதுகள் வழங்கும் விழாவில் இலங்கையின் மிகச்சிறந்த Valvoline
TM விநியோகஸ்தர்கள் 60 பேர் கௌரவிக்கப்பட்டனர். இவ் உச்சி மாநாட்டில் 20 ற்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இருபத்தினான்கிற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.
'Ashland நுகர்வோர் சந்தை மற்றும் Valvoline வர்த்தக நாமத்திற்கான மிக முக்கிய சந்தையாக ஆசியா விளங்குகிறது' என ஆசியாவிற்கான Valvoline பிராந்திய பணிப்பாளர் ஆலோக் ஷர்மன் தெரிவித்தார். 'Valvoline சம்பியன் விநியோகஸ்தர் விருது விழாவில் இலங்கையைச் சேர்ந்த எமது சிறந்த விநியோகஸ்தர்களை கௌரவித்தமை குறித்து நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். Valvoline வெற்றிக்கான பங்களிப்பு, சந்தை அங்கீகாரம் மற்றும் சிறந்த செயற்பாடுகள் காரணமாக இவ் விநியோகஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டனர். மோட்டர் சைக்கிள்கள், கார்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் போன்றவற்றிற்கான எமது மிகச்சிறந்த தயாரிப்புக்களுக்கான சந்தை பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம்' என தெரிவித்தார்.
இம் மாநாட்டில் Valvoline அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பிராந்திய அடிப்படையிலான புதிய Valvoline உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் தொடர்பான எதிர்கால திட்டமிடல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
'ஆசிய விநியோகஸ்தர் மாநாட்டை கொழும்பில் நடத்தி ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தைகளுள் ஒன்றாக இலங்கையை அடையாளப்படுத்திய Valvoline குறித்து யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா மிகவும் மகிழ்ச்சியடைகிறது' என யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சானக யட்டவர தெரிவித்தார். 'UML மற்றும் Valvoline இன்டர்நெஷனல் நிறுவனங்களுக்கிடையே காணப்படும் பங்காண்மை குறித்து நாம் பெருமையடைவதுடன், எதிர்காலத்தில் இலங்கையினுள் Valvoline வர்த்தகநாமம் மற்றும் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளோம்' என்றார்.
Valvoline வர்த்தகநாமமானது, உலகளவில் பரந்துபட்ட சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் மூலம் முதற்தர உராய்வு நீக்கிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இவ் வர்த்தகநாமம் மிக நீண்டகால நம்பிக்கையையும், உராய்வு நீக்கி துறையில் முதலாவதும், மிகப் பழைமையானதுமான வணிக அடையாளத்தை(1873) கொண்டுள்ளது. 1899களில் முதலாவது உராய்வு நீக்கி மினரல் ஒயில் அறிமுகம், 1954களில் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற ஒயில், 1965களில் முதலாவது ரேசிங் ஒயில் மற்றும் 2000ஆம் ஆண்டில் அதியுயர் மைலேஜ் கொண்ட மோட்டர் ஒயில் போன்றவற்றை அறிமுகம் செய்து 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றினை கொண்டுள்ளது. Valvoline மோட்டர் ஒயில் ஆனது புதிய உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கி இத் துறையில் தனித்துவமான இடத்தினை பெற்றுள்ளது.
