Editorial / 2018 ஜூலை 18 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதாரம், அரசியல், கலாசார உள்ளீடுகள், மூலதனம் (சந்தை), மாநிலம், சாதாரண மக்களினூடாகச் செயற்படுத்தப்படுகின்ற சக்திகளால் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன.
மாற்றத்தை வெளிப்படுத்துவதற்கு மூலதனம் மற்றும் அரசு என்ன செய்கின்றது என்பது இலகுவாக விளங்குகின்றது. வீதிகள், பூங்காக்கள், துறைமுகங்கள், உட்கட்டமைப்பு போன்ற பொது இடங்கள் அரசாங்கத்தால் கட்டியமைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றன. அதேவேளை, உயர்ந்த வளாகங்கள் பலவற்றை மூலதனங்கள் உருவாக்குகின்றன.
மிகப்பெரிய, மிகவும் மாறுபட்ட, மிகவும் சிக்கலான குழுக்கள் போன்ற மூன்று சக்திகளின் மத்தியில், குடிமக்கள் இருக்கின்றார்கள் என்று சிவில் சமூகம் குறிப்பிடுகின்றது. இச்சக்திகள் அரசு மற்றும் சந்தை போன்ற முறையான அமைப்புகளினூடாக ஒழுங்கமைக்கப்படுவதில்லை. இருப்பினும், நுகர்வோர்கள், பயனாளர்கள், தொழிலாளர்கள் போன்றோர் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, அரச மூலதனங்களின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஓர் அர்த்தத்தைக் கொண்டு வருகின்றன.
எனது தூண்டுகோளாக அமைந்த, நிஹால் பெரேராவின் ‘மக்கள் பிரதேசம்’ (People’s Space) எனும் நூலானது, சாதாரண குடிமக்கள் நகரத்தின் சமூக மற்றும் பௌதிக இடங்களுக்கு அர்த்தத்தை கொண்டு வருகின்ற வழியை ஆராய்கின்றது. கலாசார, பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக, எமக்குத் தொலைவிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து நவீன கட்டடக்கலையின் நினைவுச் சின்னங்களை, இறக்குமதி செய்வதனூடாக, மேலாதிக்க பங்காளர்களைத் தெரிவு செய்ய விரும்புகின்ற போது, அமைதியாக இருப்பது மற்றும் சிறிய வழிகளில் குடிமக்கள் மாற்றமடைவதை, இந்நூலானது ஆராய்கின்றது.

உதாரணமாக, மழைத் தடுப்பற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, புதிய உயர்தரமான மற்றும் விலையுயர்ந்த சந்தைக் கட்டமைப்புகளைக் (Pola Structures) குறிப்பிடலாம். உலகின் ஏனைய பகுதிகளில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக ஈர்க்கப்படுவதில் தவறொன்றும் இல்லை. என்றாலும், நாட்டின் சொந்த மக்களால் உருவாக்கப்படுகின்ற நவீனத்துவத்தை ஒருபோதும் தவிர்க்க முடியாது.
எமது இடங்களை நன்றாகப் புரிந்து கொள்வதற்காக, சந்தி (Junction), சந்தை (Fair) போன்ற உள்ளூர் இடங்களை விசாரித்தேன். மாபெரும் கொழும்பு நகரமானது, எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டுள்ளது, கலாசார மூலதனம் மற்றும் சந்தை மக்கள் தமக்கெனச் சொந்த நகரமொன்றை கட்டியெழுப்புவதற்கான சுதந்திரம் போன்றவற்றை விளங்கிக்கொள்வதற்கு, மாலபே, கொட்டாவ போன்ற பிரதேசங்களில் மேற்கொண்ட ஆய்வு உதவியாக அமைந்தது.
கொட்டாவையில் உள்ள ‘அங்கஹருவாத பொல’ (செவ்வாய்ச் சந்தை) 1920இல் மொத்த விற்பனைச் சந்தையாக ஆரம்பிக்கப்பட்டது. கொட்டாவ, கொழும்பு மாநகரின் புறநகர்ப் பகுதியாக மாறிய போது, வெற்றிலை மற்றும் ஏனைய விவசாயப் பொருட்களின் உற்பத்தி குறைவடைந்தன. தற்போது, சில்லறைக் கடைகளாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது உலகிலிருந்தும் நாட்டின் பிற பாகங்களிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற காய்கறிகள், பழங்கள், மசாலா, தானியங்கள் மற்றும் பல தினசரி பொருட்களை உள்ளூர் வாசிகளுக்குப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
மேலும், ஆக்கத்திறனானது அப்பிரதேசத்தில் இன்னும் முடிவடைந்து விடவில்லை. எனது மூன்று மாத கால ஆய்வின் போது, (ஒரு சிற்றுண்டி விற்பனையாளருக்காக வேலை செய்தல்), கொழும்பில் அலுவலக நேரங்களைத் தொடர்ந்து, அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு முகங்கொடுக்கும் வகையில், கொட்டாவ சந்தை எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அவதானித்தேன்.
போக்குவரத்து நெரிசல் மோசமடைகையில், வாடிக்கையாளர்கள் சந்தையை அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றார்கள். இதன் காரணமாக விற்பனையாளர்கள் தமது விற்பனை நேரத்தை விரிவாக்கிக் கொள்கின்றார்கள். அத்தோடு, சந்தைப் பிரதேசத்தை வெளிச்சமூட்டுவதற்கான முறையையும் விருத்தி செய்துள்ளனர். இவ்வாக்கத்திறன், உறுதிப்பாடு, வளம் போன்றன, நகர மக்களைப் பற்றியும் அவர்கள் உருவாக்கிய நவீனத்துவம் பற்றியும் என்ன சொல்கின்றது?
மக்கள் ஆக்கத்திறன் வாய்ந்தவர்கள். எனவே, அரசு மற்றும் முதலீட்டாளர்கள் அதை ஒதுக்கித் தள்ளுவதை விட, அவ்வாற்றலைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் திறமையான விடயமாகும்.
குடிமக்கள் நாட்டின் கனவு. தலைவர்கள் அல்லது முதலீட்டாளர்களுக்கு செயலற்றவர்களாக குடிமக்கள் இருப்பார்களாயின், எந்தவொரு தகவல்களைப் பயன்படுத்தவோ, இடங்களை அறிந்து கொள்ளவோ முடியாது. ஓர் இடைத்தொடர்பு, எப்போதும் ஒரு சந்தையாக மாறாது. ஆனால், ஒரு நகரின் மத்தியில் தான், ஒரு சந்தை அமைந்திருக்கும்.
அனைத்து ‘முறையற்ற’ அல்லது ‘ஒழுங்கற்ற’ தொழில்கள் இல்லாதொழிக்கப்பட்டால், ஆக்கத்திறன் வாய்ந்த ஆயிரக்கணக்கான துறைகள் மற்றும் சமூகப்பொருளாதார இடங்கள் மூலம் உருவாக்கப்பட்ட நகரங்கள் அமைதிப்படுத்தப்படும். மிகவும் விலையுயர்ந்த, கணிக்கக்கூடிய மற்றும் சலிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு சுத்திகரிக்கப்பட்ட, ஒழுங்குப்படுத்தப்பட்ட நகரமாக மட்டுமே இருக்கும்.
இது வெறுமனே நகரத்தின் அழகு தொடர்பான விடயமல்ல. ஆனால், பசி மற்றும் சமூக அமைதியின்மையுடன் தொடர்புடையது. அரசு மற்றும் சந்தையால் உருவாக்கப்படுகின்ற கட்டமைப்புகளுக்கேற்ப பயிற்சி பெறாத மக்கள், அல்லது பிரதானமான பெரியளவிலான வியாபாரங்கள் அல்லது திட்டங்களானது, பிச்சைக்காரர்களாக அல்லது அவ்வாறு அழைக்கப்படுகின்ற உரு அமைப்புக்கு ஒரு சுமையாக மாறும்.
நாம் இதனை விரும்பவில்லையெனில், முக்கிய இரு பங்காளர்களால் உருவாக்கப்பட்ட பௌதிக இடங்கள் மற்றும் சமூக இடைவெளிகளில், வளங்களை விரிவுபடுத்துதல் மற்றும் உருவாக்கப்படுகின்ற மில்லியன் கணக்கான மாயைகள் மூலம் ஒரு நகரத்தை உருவாக்குகின்ற குடிமக்களின் கலாசார சக்தி போன்ற மூன்றாவது சக்தியை மதிப்பிடுவதற்கான நேரம் இதுதான்.
ஒழுங்குமுறை அல்லது அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டுள்ள மிகப்பெரிய திட்டங்களுக்குள் உள்ளடக்கப்படாத காரணத்தால், உதவியளிக்கப்படாமல் இருக்கின்ற பெரும்பாலான மக்களைக் கவனித்துக் கொள்வதானது, நகரத்தின் நிலைபேறுக்கு காரணமாகின்றது.
வறுமையை அதிகரிக்காமல் நகரத்தை எவ்வாறு பராமரிக்க முடியும்?
நகர மக்களை கருத்தில் கொண்டு, அவர்களால் உருவாக்கப்படுகின்ற பிரச்சினைகளல்லாது அவர்களால் உருவாக்கப்படக்கூடிய மூலவளங்களை கவனத்தில் கொள்வதனூடாக இதனைச் செயற்படுத்தலாம்.
தொகுப்பு: நிர்மானி லியனகே
வறுமை ஆராய்ச்சி நிலையம்
15 minute ago
27 minute ago
37 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
37 minute ago
5 hours ago