2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

வீட்டு ஜன்னலோரத்தில் நிர்வாணமாக நின்ற நபருக்கு 10 வருட தடை

Kogilavani   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது வீட்டு ஜன்னலின்  முன்னால் நிர்வாணமாக நின்ற நபர் ஒருவருக்கு 10 வருட காலத்திற்கு அவ்வாறு நிற்கக்கூடாது என  பிரித்தானிய நீதிமன்றம்  தடைவிதித்துள்ளது.

34 வயதான மார்க் பென்போல்ட் என்ற இயற்கை விரும்பியான இவர் தனது படுக்கையறையில் உள்ள கண்ணாடி  ஜன்னலின் முன்னால் நிர்வாணமாக நிற்பதை தனது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இதனால், இவரின் வீட்டை கடந்து செல்லும் பெரும் எண்ணிக்கையான பாடசாலை மாணவிகள், மற்றும் பெண்கள் பலர் அசௌகரியத்திற்குள்ளாகின்றனர் என புகாரிடப்பட்டிருந்தது.

இது குறித்து ஆஷ்போர்ட் நகர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் அவர்  பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த எச்சரிக்கையை புறக்கணித்து வந்துள்ளார். இறுதியில்  கடந்த ஜுலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையின்போது  தனது நடத்தையைக் கண்ட பெண்கள்  அச்சத்திற்குள்ளாகியிருக்கலாம் என்பதை பென்போல்ட் ஏற்றுக்கொண்டர். ஆனால், தனது அந்த நடத்தையானது பாலியல் வேடிக்கையின் ஒரு பகுதி என அவர் கூறியுள்ளார். 'தாங்கள் பார்த்ததை விரும்பிய' பெண்களுடன் தாம் காதல் தொடர்புகளை ஆரம்பித்ததாக அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணையின் முடிவில் பென்போல்ட் 36 மாதங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும்  பாலியல் குற்றத்திற்கான மருத்துவ சிகிச்சையொன்றுக்கு உட்பட வேண்டுமெனவும்  நீதபதி ஜேம்ஜ், மேஹோனி தீர்ப்பளித்தார்

'உங்களது அசாதாரண பாலியல்  பழக்கத்தினால் மற்றவர்கள் குழப்பமடைகின்றனர்' என பென்போல்ட்டிடம் நீதிபதி தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • xlntgson Monday, 11 April 2011 09:04 PM

  வினோதம் தான், எட்டிப்பார்த்தவர் குற்றக்காரர் இல்லையா?
  மேலும் எட்டிப்பார்த்ததோடு நிற்காமல் அந்த பெண்கள் அவரோடு உறவு கொண்டதாகவும் கூறுகின்றார், அவர்களையும் தண்டிக்க வேண்டாமா?
  ஓர் இளம் பெண் நிர்வாணமாக தெருவில் ஓடுகிறாள், அது குற்றமில்லை மேலைத்தேய நாடுகளில். ஆனால் தன் வீட்டிலேயே ஒருவர் ஆடை களைய அனுமதி வேண்டும்?
  பத்து வருடம் போதுமா அப்படி என்றால், கிழவர்களுக்கு சட்டம் இல்லையோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X