2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

செல்லிட தொலைபேசியை பயன்படுத்த முடியாத சுமோ வீரர்கள்

Kogilavani   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர்கள் சங்கம் அவ்வீரர்களுக்கு ஐபாட்களை (iPads) விநியோகித்து வருகிறது.

அவ்வீரர்களின் தடித்த விரல்களால் சாதாரண செல்லிடத் தொலைப்பேசியை பாவிக்க முடியாமல் போயுள்ளதாம். இதனால் அவர்களுக்கு iPads களை வழங்க, 'சுமோ வீரர்கள் சங்கம்' தீர்மானித்தது. இதுவரை அச்சங்கம் 60 iPadகளை விநியோகித்துள்ளது.

 'இதை இலகுவாக பயன்படுத்தலாம். அத்துடன் மின்னஞ்சலையும் இலகுவாக அனுப்பலாம்' என்று அந்த சங்கத்தின் தலைவர் ஹனாரேகொமா தெரிவித்துள்ளார்.

62 வயதான முன்னாள் சுமோ மல்யுத்த வீரரான அவர், தனது செல்லிடத் தொலைப்பேசிக்கு வரும் குறுந்தகவல்களை வாசிப்பதற்கு இயன்ற போதிலும் அந்த குறுந்தகவல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்ற முறையும் கணினியை பயன்படுத்தும் முறையும் தெரியாது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

சுமோ மல்யுத்த வீரர்களின் தடித்த விரல்களுக்கு இதனுடைய iPad களின் இடைவெளிகள் போதுமானதாக இருக்கும் எனக் கருதப்படுவதால் அவற்றை தெரிவுசெய்ததாக மேற்படி சங்கம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .