2021 ஜூன் 19, சனிக்கிழமை

பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார்.

பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண்  தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார்.

இந்தக் கன்றுக்கும் மனிதக் குழந்தைக்கும் எதுவித வேறுபாடுகளும் இல்லையென அவர் கூறுகிறார்.

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவுதி பாய் என்னும் பெண்ணே இவ்வாறு கன்றுக்கு பாலூட்டி வருகிறார்.
 
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், 'இந்தக் கன்று பிறந்தவுடன் அதனது தாயை பறிகொடுத்தது. அதுநாள் முதல்  இந்தக் கன்றை நானே எனது கைகளால் தூக்கி வளர்க்கின்றேன். அந்தப் பசுக்கன்றுக்கு இயற்கை முறையில் நான் பாலூட்டி வருகின்றேன்.

தாய்ப் பசு இறக்கும்போது அந்த இளம் கன்றை நான் கண்டேன். குழந்தைக்கும் அந்தக் கன்றுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

சில நேரங்களில் சப்பாத்தி போன்ற உணவுகளை உண்பதற்கு வழங்குவோம். அதனோடு மிகவும் மெதுவாக தண்ணீரை குடிப்பற்கு வழங்குவோம். இந்த விரதத்திலிருந்து அந்தக் கன்று வளர்ச்சியடையத் தொடங்கியது.

கடவுள் அருளினால் இந்தக் கன்றை என்னால் வளர்க்க முடிகிறது' என்று தெரிவித்துள்ளார்.

அந்த கிராமத்திலிலுள்ள மற்றுமொருவர் கூறுகையில், 'இந்தச் சம்பவம் முதன்முறையாக எமது கிராமத்தில் நடந்துள்ளது. அப்பெண் எங்கு சென்றாலும்  தன்னுடன் கன்று குட்டியையும் கொண்டு செல்வார். எமது தாய் எமக்குப் பாலூட்டியதைப் போன்று அந்தக் கன்றுக்கு பால்கொடுப்பார். அவள் தன்னுடைய பாலையே அந்தக் கன்றுக்கு உணவாக' ஊட்டி வளர்க்கின்றார்' எனத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கன்று, கவுதி எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து செல்கின்றது.

கடந்த வருடம் ஜப்பானைச் சேர்ந்த பெண்ணொருவர் பூனையொன்றுக்கு பால்கொடுத்த வீடியோகாட்சி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • nnassm Saturday, 04 September 2010 06:05 PM

  மனித நேயம் அளவுக்கு மிஞ்சி விட்டது.

  Reply : 0       0

  srikant Saturday, 04 September 2010 09:16 PM

  இதை மனிதநேயம் என்று குறிப்பிட இயலாது ஜீவ காருண்யம்/எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுதல்-மனிதருக்கு மட்டுமல்ல.மனிதற்கு மனிதர் அன்பு காட்டினால் அது சந்தேகத்துக்கு இடமாகும் என்பதனாலே ஆரம்பமே பழிப்பில் தான்! பூனை பெரிய பிராணி அல்ல, ஆனால் இந்த கன்றுக்குட்டி சங்கதி ஆச்சரியம் தான். தன் பிள்ளைக்கு பால் இல்லாமல் போனால் என்ன செய்வாராம்?விபரீதமான ஆசைகளும் முயற்சிகளும்.எவ்வளவு நாளைக்கு அப்படி பாலருத்துவாராம்? இரண்டு மாதம்?மிருக வைத்தியர்கள் என்ன கூறுகின்றனர் என்று அறிய ஆவல்,யாரேனும் கருத்து சொன்னால் எப்படி?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .