2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மாபியா குற்றவாளிகளுக்காக விசேட அழகுராணிப் போட்டி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altமாபியா கும்பல்களுடன் தொடர்புப்பட்டு, குற்றங்களை புரிந்த யுவதிகளுக்காக மாத்திரம் விசேட அழகுராணி போட்டியொன்று ஹங்கேரியில் நடைபெறுகிறது. மாபியா குற்றவாளிகளுக்கான அழகு ராணிப் போட்டி இடம்பெறுவது உலகில் இதுவே முதல் தடவையாகும்.

போட்டியாளர்கள், தமது பின்னணி பற்றிய பொலிஸ் அறிக்கையொன்றை அனுப்பிய பின்னரே அவர்களின் புகைப்படங்களை   போட்டிக்கான இணையத்தளத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்று சி.ஈ.என். ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், சிறையில் செலவிட்ட காலம் என்பன போன்ற முக்கிய விபரங்களும் புடாபெஸ்ட் நகரிலுள்ள போட்டிக்கான நடுவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.

இந்த போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தெரிவான அனா குறிப்பிடுகையில், "எனது நாண்பர்கள் அழகு ராணிப் போட்டிகளில் பங்குப் பற்றும்படி பல தடவைகள் கூறினார்கள். ஆனால், குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பங்குபற்ற முடியாது என்ற நிபந்தனை காரணமாக என்னால் அவற்றில்பங்குபற்ற முடியவில்லை. இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதில் வெற்றிபெறுபவர்கள் கார் ஒன்றையும் புடாபெஸ்ட் நகரில்  தொடர்மாடி வீடொன்றையும் பரிசாக பெறுவார்கள்.  

அழகுராணி யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, முன்னொரு தடவை மாபியா கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது குண்டு வீசப்பட்ட மதுபானவிடுதியொன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"எங்களிடம் திருடர்கள், மோசடிக் காரர்கள், வங்கிக் கொள்ளையர்கள் மற்றும் மோசமான நடத்தை கொண்டவர்கள்  போன்றவர்கள் உள்ளனர். எனவே அந்த இரவு மிகவும் சுவாரஷ்யமானதாக இருக்கும்" என்று இப்போட்டியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .