2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

உடலை வளைப்பதில் உலகப் புகழ்பெற்ற யுவதி

Kogilavani   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் பிறந்த முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான  ஸ்லாடா (வயது 24)  நம்ப முடியாத வகையில் உடலை வளைப்பதில் உலகப் புகழ்பெற்ற பெண்ணாக காணப்படுகின்றார்.

5 அடி 9 அங்குலம் உயரமான ஸ்லாடாவின் எடை 53 கிலோகிராம் மாத்திரமே.  இவர் அவரது அதிகமான நாட்களை ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்காக எடுத்துக்கொண்டதுடன் அவரது திறமையை உலகம் முழுதும் காண்பித்துள்ளார்.

உடலை இரண்டாக மடிப்பதுபோல் இடுப்புக்கு மேற்பட்ட பகுதியை  பின்னோக்கி வளைத்து அவரது கைகளால் பாதங்களை தொடுவது  அவரது பிடித்த செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

தனது கால்களை பின்னால் மடித்து இழுப்பது பெரிய விடயம் இல்லையென்று ஸ்லாடா கருதுகின்றார். அவரது கால்களை கழுத்துப் பகுதியில் கொழுவிக்கொண்டு கைகளால் தரையில் தரித்து நிற்கின்றார் அவர்.

ஸ்லாடாவினால், சுமார் 50 சென்றீ மீற்றர் அளவுடைய பெட்டியில் தனது முழு உடலையும் அழுத்தி வைத்துக்கொள்ள முடியும்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் 'நான் உண்மையில் உணவுக் கட்டுப்பாட்டை  மேற்கொள்வதில்லை. ஆனால்,  எனது தசைகளை கட்டுக்கோப்புடனும் நெகிழ்வுத்தன்மையுடனும்  வைத்துக்கொள்வதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபடுவேன். அது உடலை வளைத்துக்கொள்வதற்கு உதவும்' எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்லாடாவின் அசாதாரண உடல் நிலை அவருக்கு உடலை வளைக்கும் ஆற்றலைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார்.

பாலர் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் ஒரு முறை அவரிடம் பாலம் போன்ற அமைப்பில் கைகயை வளைத்து கைகளும் பாதங்களும் தரையை தொடும் அளவு நின்று காட்டுமாறு  கூறியபோதுதான் முதன் முதலாக அவர் தனது உடலை வளைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

தனது வகுப்பு சகாக்களைவிட தான்  சிறப்பாக இருந்ததால் தன்னுடன் இருந்த மற்ற சிறுமிகள் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தாக அவர் கூறுகிறார்.

'நான் சிறப்பாக உடலை வளைப்பதை ஏனைய சிறுமிகள் விரும்பவில்லை.

ஆனால்,  இக்கலையை நான் ஆரம்பித்ததிலிருந்து அதற்கு அடிமையாகிவிட்டேன். எனது வாழ்க்கை முழுவதும் இதைத் தொடர  நான் விரும்புவேன் என்பது எனக்குத் தெரியும்' என்கிறார் ஸ்லாடா.


 


  Comments - 0

 • Alfred Wednesday, 10 November 2010 03:12 AM

  இது என்ன உடலா?

  Reply : 0       0

  xlntgson Wednesday, 10 November 2010 09:08 PM

  ஜிம்னாஸ்டிக்ஸ்-gymnastics-சிறந்த உடற்பயிற்சி. ஆனால் நமது யோகக்கலை தான் இதற்கு முன்னோடி என்றால் ஒருவரும் நம்பமாட்டேன் என்கிறார்கள், அதுவேறாம் இதுவேறாம்!
  இந்தியா இப்போது இவ்வாறான அசைவுகள் யோகநிலைகளை உலக புலமை சட்டப்படி பதியவிருக்கிறதாம். ஏனெனில் இவற்றை நிர்வாண நிலையில் செய்து பணம் சேர்த்துவிட்ட பலர் உருவாகி விட்டனராம்.
  கேவலம் என்னவென்றால் அவர்கள் முந்திக்கொண்டு பதிந்து விட்டனர். இந்த பைத்தியக்கார சட்டப்படி பதிவுடையவர்களுக்கு ஒரு நரம்பு கூடிவிடும், அவர்களை கூட்டில் ஏற்ற கடினம்! பதிவில்லாதவர் கதி, அதோகதி!

  Reply : 0       0

  nnassm Friday, 12 November 2010 02:28 AM

  நம்ப முடியவில்லை.............இவரின் யூடுபே சைட் எதாவது உண்டா?

  Reply : 0       0

  suresh Saturday, 13 November 2010 10:42 PM

  ஆகா என்ன ஆச்சரியம்!இவருக்கு விலா எலும்பு இறப்பறினால் உருவாக்கப்பட்டதா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .