Kogilavani / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய வீடியோவொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை சுமார் 7 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதனா குழந்தையான ஹெல்மியை வைத்து இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
ஹெல்மி அதிகமான மது மற்றும் பியர்களை எடுத்து அருந்துவதும் பின்பு மது அருந்திய இடத்திலிருந்து நிலை தடுமாறுவதும் படமாக்கப்பட்டுள்ளது.
பின்பு அக்குழந்தை மதுபான நிலையத்திலுள்ள ஏனையோரின் உணவுகளை திருடி உண்பது, விளையாடுவது, மேசைமீது மோதிக்கொள்வது போன்ற காட்சிகள் இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கிரான் கனேரியா தீவுக்கு விடுமுறைக்காகச் செல்லும் நடுத்தர வயது பெண் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற விபரத்தை கூறும் 'லாஸ் பால்மாஸ்' என்ற குறுந்திரைப்படத்திற்கான ட்ரைலராகவே இந்த ஒரு நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த வயதான பெண்ணின் பாத்திரத்தில் ஹெல்மி தோன்றுகிறாளாம்.
ஹெல்மி, மோட்டார் சைக்கிளில் அமர்ந்துக் கொண்டு புகைப்பிடிப்பதும், கடற்கரையில் பியர் போத்தலை அருகில் வைத்துக் கொண்டு உறங்குவதுமான காட்சிகள் இவ்வொளி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கோதென்பேர்க் திரைப்பட விழாவில் சிறந்த குறுந்திரைப்பட இயக்குநருக்கான விருதையும்,பார்வையாளர்கள் விருதையும் 'லாஸ் பால்ம்ஸ' குறுந்திரைப்படம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தனது ட்ரைலர் வீடியோ குறித்து ஜொஹன்னாஸ் நய்ஹோல்ம் கருத்துத் தெரிவிக்கையில் 'இப்படத்தில் இருப்பது எனது மகள். அவள்தான் இதற்கு உந்துசக்தி. அனைத்தும் அவளிடமிருந்தே வந்தது. ஆனால், நடுத்தர பெண் குறித்த வேடிக்கைக் கதையில் சிறிய குழந்தையை பயன்படுத்தியதை சிலர் விமர்சிக்கிறார்கள்தான்' என்று கூறியுள்ளார்.
16 minute ago
22 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
38 minute ago
1 hours ago