Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் தனது செல்லப் பிராணியான நாய்க்கு 20,000 ஸ்ரேலிங் பவுண் (சுமார் 35 லட்சம் ரூபா) செலவழித்து பிரமாண்டமாக திருமனம் செய்து வைத்த சம்பவமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.
லூஸி ஹரிஸ் எனும் 32 வயதான பெண்ணே மேற்படி திருமணத்தை நடத்தியுள்ளார். அவர் தனது வளர்ப்புப் பிராணியான 6 வயதுடைய் லோலா என்ற நாய் தனிமையில் இருப்பதை தவிர்ப்பதற்காக அந்நாய்க்கு திருமணம் செய்து வைப்பதற்கு திட்டமிட்டாராம். இதற்காக அந்நாய்க்கு பொருத்தமான துணை நாய் ஒன்றை அவர் தேடியுள்ளார்.
'லோலா சரியான திருமண நாளை அனுபவிக்க வேண்டுமென நான் தீர்மானித்தேன்' என்று லூஸி ஹிரிஸ் தெரிவித்துள்ளார். இவர் நாய்களுக்கான கடையொன்றை நடத்தி வருகிறார்.
இதற்காக அவர் இணையத்தளங்களின் மூலம் லோலாவிற்கான துணையை தேர்ந்தெடுத்தார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட துணையானது இளமை மிகுந்த லுலு எனும் நாய் ஆகும். அதற்கு 4 வயது ஆகின்றது.
இந்நாய்களுக்கு மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார் லூஸி ஹரிஸ்.
இத்திருமண வைபவத்திற்காக 1800 ஸ்ரேலிங் பவுண்கள் பெறுமதியுடைய பளிங்குகள் பதிக்கப்பட்ட ஆடை மற்றும் நெக்லஸ் என்பவற்றை அவர் திருமணத்தின் போது மணமகளான நாய்க்கு அணிவித்தார்.
லோலாவிற்கான ஆடையை நாய்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் மைக்கல் ஓச்ஸ் தயாரித்திருந்தார்.
இதற்கான பெறுமதி 1000 ஸ்ரேலிங் பவுண்களாகும். மணமகன் தோழர், மணப்பெண் தோழி பாத்திரம் ஏற்ற நாய்களுக்கும் நூற்றுக்கணக்கான ஸ்ரேலிங் பவுண் செலவில் அவர் ஆடை ஆபரணங்களை அணிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திருமணத்திற்கு 80 பேர் வருகை தந்திருந்தனர். திருமணத்திற்காக வீடு மலர் கொத்துக்களினாலும் பலூன்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
2 hours ago
4 hours ago
NALAN BSX Tuesday, 12 April 2011 08:39 PM
பைத்தியம் எருமை மாடுகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago