2021 மே 15, சனிக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் மன்னார் மாவட்டத்தின் அறிமுகம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நேற்று  (1), மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் இணைப்பாளர் சி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் பணிப்பாளர் எம்.எஸ்.சாதீக், தூய ஜோசப் வாஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.கிறிஸ்ரியான், மன்னார் பிரதேச சபையின் செயலாள் என்.சிவயோகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்களின் அமைப்பின் மன்னார் மாவட்டத்தின் அறிமுகம் இடம்பெற்றதோடு, அவர்களின்  செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு, அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .