Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2017 ஜூன் 05 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி, பிரமந்தனாறுக் குளத்தில் மீன்பிடிப்பதற்காக, நேற்று தந்தையுடன் படகில் சென்ற இளைஞன், படகு புரண்டதில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிராம மக்களால் மீட்கப்பட்ட தந்தை - மகன் ஆகியோர் தர்மபுரம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனினும், மரணமடைந்த நிலையிலையே கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இளைஞன், மயில்வாகனபுரம் புன்னைநிராவியைச் சேர்ந்த உதயகுமார் குமரன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இளைஞனின் சடலம், மரண விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .