2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

‘மைதானங்களில் மரக் கன்றுகள் நாட்டப்படும்’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பெரியகமம் பகுதியில்  உள்ள மைதானங்களை மன்னார் நகர சபைக்கு  சொந்தமாக்கி, அங்கு   தென்னை, வாழை போன்ற மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக, மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்தார்.

மன்னார் - பெரியகமம் பகுதியில்  உள்ள பற்றைக்காடுகளை, இன்று (12) துப்புரவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் நகர சபைக்குச் செந்தமான  மைதானப் பகுதிகள் அனைத்தும் துப்புரவு செய்யப்படுவதாகவும் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு, தமது காணிகளைத் துப்புரவு செய்வதற்கு 14 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ள பெரியகமம் பகுதியில்  உள்ள மைதானங்களை பெரியகமம்  இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவை பராமரிக்கப்படாமல் இருந்தமையால், அவற்றை மன்னார் நகர சபை பொறுப்பேற்று, தென்னை, வாழை போன்ற மரக் கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும்  கூறினார்.

அத்துடன், மன்னாரைச் சொந்த இடமாக கொண்ட  எத்தனையோ குடும்பங்களுக்கு காணிகள் இல்லையெனவும் இதற்கான மாற்று நடவடிக்கைகளை மன்னார் நகர சபையால் எடுப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர் ஜோசப் தர்மன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .